கைதி 2வில் ஜெயில் சீன் இருக்கு.. நானும் ஆர்.ஜே. பாலாஜியும் என்ன ஜெயில் மேட்ஸா.. லோகேஷ் கனகராஜ் கலாய்!

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். இந்த படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். சொர்க்கவாசல் படத்திற்கு திரைக்கதை வடிவமைப்பில் சித்தார்த் விஸ்வநாத்துடன் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து பணியாற்றியுள்ளனர். படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று அதாவது நவம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ட்ரைலரை படத்தின் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்தின் நண்பரும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் ரிலீஸ் செய்தார். அவருடன் இசை அமைப்பாளர் அஸ்வினும் படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்தார். இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

சொர்க்கவாசல் படத்தினை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கின்றது. பிரின்ஸ் ஆண்டர்சன் படத்தின் கேமரா மேனாக பணியாற்றியுள்ளார். பா. ரஞ்சித்தின் தங்கலான், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய செல்வா ஆர்.கே இந்தப் படத்திற்கும் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

lokesh kanagaraj rj balaji

ட்ரைலரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் வெளியிட்டனர். படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டரை சில வாரஙகளுக்கு முன்னர் இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா. ரஞ்சித் வெளியிட்டதால், படத்தின் மீது தனி அட்டேன்சன் உருவானது. படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகன் ஆர்.ஜே. பாலாஜி: ட்ரைலரை ரிலீஸ் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள பெரும்பான்மையானவர்கள் எனது நண்பர்களாக உள்ளனர். படத்தின் சில காட்சிகளை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். எனது நண்பன் ஆர்.ஜே. பாலாஜி சிறப்பாகவே நடித்துள்ளார். படத்தின் சில காட்சிகளை ஆர்.ஜே. பாலாஜிதான் எனக்குக் காட்டினார். அதனைப் பார்த்த பின், ஆர்.ஜே. பாலாஜி எனும் நடிகன் உருவாகிவிட்டான் எனக் கூறினேன். படத்தினை நானுமே பார்க்க ஆவலாக இருக்கின்றேன் என்றார்.

lokesh kanagaraj rj balaji

ஜெயில் மேட்ஸ்: இதற்கிடையில் ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தில் கைதியாக நடித்துள்ளார். உங்களது படம் கைதி, இது தொடர்பாக எதாவது கூறமுடியுமா என்ற கேள்விக்கு, " நீங்க கேட்பதைப் பார்த்தால் நானும் ஆர்.ஜே. பாலாஜியும் ஜெயில் மேட்ஸ் மாதிரி இருக்கு. கைதி படத்தில் சில ஜெயில் போர்ஷன் இருக்கின்றது. இந்தப் படத்தில் என்ன செய்து வைத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. கைதி 2 படத்திற்காகவே சொர்க்கவாசல் படத்தினைப் பார்க்கவேண்டும்" எனக் கூறினார். லோகேஷ் கனகராஜ் இவ்வாறு கூறும்போது அரங்கில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

கூலி: லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தினை இயக்கி வருகின்றார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X