எனக்கு வரும் 10ல் 5 கதை சூரிக்கு எழுதப்பட்டது.. அவர் வளர்ச்சி பிரமிப்பா இருக்கு..லோகேஷ் கனகராஜ்!

சென்னை: எனக்கு வரும் பத்து கதைகளில் ஐந்து கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டதாக இருக்கு, அவரின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கு என்று மாமன் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசி இருந்தார். சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மாமன் படம் மே 16ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதில், ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன் என பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், இந்த படத்தினுடைய ட்ரெய்லரை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். அந்த ட்ரைலரை பார்க்கும்போதே இந்த படம் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது தெரிந்தது. கமர்ஷியல் குடும்பப் படத்துக்கான எல்லாமும் இந்தப் படத்தில் இருக்கு இதற்காக நான் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சூரி அண்ணனோட வளர்ச்சியை பார்க்கும்போது பிரமிப்பாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கு. இங்கு இருக்கும் அனைவரும சூரி அண்ணனோட வளர்ச்சியை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். யாரும் இவரின் வளர்ச்சியைப் பார்த்து, வருத்தப்பட்டது இல்லை அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதுதான் உண்மையான வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில், சின்ன சின்ன படத்தை ரிலீஸ் செய்து வருகிறேன். இதில் எனக்கு பத்து கதை வருகிறது என்றால், ஐந்து கதை சூரி அண்ணனுக்காக வருகிறது. சூரி அண்ணனோட அந்த வளர்ச்சி பயங்கர பெருசாக இருக்கு, அதோட இல்லாமல் இன்னும் அவர் தொடர்ந்து வளர வேண்டும் என்று பேசினார்.

Maaman soori Lokesh Kanagaraj

சூரி பேச்சு: இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, கருடன், விடுதலை, கொட்டுக்காளி படங்கள் எல்லாம் ஒரு மாதிரி இறுக்கமான படங்களாக இருக்கும். இதனால், ஜாலியாக குடும்ப படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக பலரிடம் கதைகளை கேட்டேன். ஆனால், அது எதுவும் என் மனதில் ஒட்டவில்லை. பிரசாந்த் பாண்டியராஜை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும், அவருடன் எனக்கு நல்ல பழக்கம், நாங்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வோம். இவர் ஒரு கிராமத்து கதையை என்னிடம் கூறினார். அது எனக்கு போதுமானதாக இல்லை. அப்போதுதான் நான் ஒரு கதையை அவரிடம் சொன்னேன், அவருக்கு அந்த கதை பிடித்து இருந்ததால் இந்த படத்தை எடுத்தோம் என்றார்.

Maaman soori Lokesh Kanagaraj

மாமன் படத்தின் கதையை சூரி எழுத, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். இவர், விமல் நடித்த விலங்கு வெப் தொடரை இயக்கி உள்ளர். சூரி நடித்த 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஹேஷப் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நேற்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் நடைபெற்றது. இதில், மாமன் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X