Coolie: ஸ்ருதி ஹாசனை தியேட்டருக்குள் விடாத ரஜினி ரசிகர்.. என்ன ஆச்சு? வீடியோவை பாருங்க புரியும்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படம் அவரது 50வது திரைவாழ்க்கை நிறைவு விழா ஆண்டில் வெளியாகியுள்ளது. படத்தில் ரஜினியுடன் நாகர்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா என பலரும் நடித்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது, மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்த போது ரஜினி ரசிகர் ஒருவர் அவரது காரை வழி மறைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடலுக்கு நல்ல வரவேற்பு, படத்திற்கு விளம்பரமே அந்த பாடல்தான் எனக் கூறும் அளவுக்கு இருந்தது.

ஸ்ருதிஹாசன்: இப்படி இருக்கும்போது, இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதாவது கூலி படத்தைப் பார்க்க நடிகை ஸ்ருதிஹாசன் தனது நண்பர்களுடன் காரில் வருகிறார். அவர்களை ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். ஸ்ருதி ஹாசனை தடுத்து நிறுத்தியவர் ரஜினி ரசிகரா அல்லது திரையரங்க ஊழியரா என தெரியவில்லை. ஆனால் ஸ்ருதி ஹாசனோ, " நான் நடிகை, இந்த படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன். என்னை உள்ளே விடுங்க" என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாராட்டு: கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன் தனது வழக்கமான படங்களில் இருந்து வித்தியாசப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவர் ரஜினியின் மகளாக நடித்துள்ளார். ரஜினிக்கும் அவருக்கும் இடையிலான எமோஷனல் காட்சிகள் அந்த அளவுக்கு இல்லை என்றாலும் ஸ்ருதி ஹாசன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
அடிமேல் அடி: கூலி படத்திற்கு விமர்சன ரீதியாக அடிமேல் அடி வாங்கி வருகிறது. இது படக்குழுவினருக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்தாலும், படத்தை வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாற்றிவிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் ரசிகர்களும் திரையுலகில் பலரும் கொடுத்த பில்டப் அளவுக்கு படம் ரூபாய் 1000 கோடிகளை வசூலிக்கும் முதல் படமாக மாறுமா என்றால் அது கேள்விக்குறிதான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான முதல் தோல்விப் படம் கூலி படம் தான் எனவும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











