Coolie Udhay Review: கூலி படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின்.. என்ன விமர்சனம் கொடுத்திருக்காரு பாருங்க!
சென்னை: இந்திய திரையுலகம் முழுவதும் இப்போது ஒரு பெயர்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது கூலி. ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இப்படம் நிச்சயம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி பல ரெக்கார்டுகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் பற்றி பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரச்சிதா ராம் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்க ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
எக்கச்சக்க எதிர்பார்ப்பு: இப்படி பல ஸ்டார்ஸ்கள் ஒரே படத்தில் இணைந்ததை தாண்டியும் ரஜினியும், லோகேஷ் கனகராஜும் முதன்முறையாக இணைந்ததுதான் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுவதற்கு முதல் காரணம். ஏனெனில் இதற்கு முன்னதாக லோகி செய்திருக்கும் சம்பவங்கள் அப்படி, புதுமுகங்கள், சீனியர் ஹீரோக்கள் என கலந்துகட்டி படம் செய்து ஹிட் ரிசல்ட்டை மட்டுமே தனது கரியரில் வைத்திருப்பவர். அப்படிப்பட்டவர் உச்ச நடிகருடன் சேர்ந்தால் ரசிகர்களிடம் ஹைப் ஏறுவது இயல்புதானே.

இப்போதே மாஸ்தான்: அந்த ஹைப்புகளின் வெளிப்பாடுதான் கூலி படம் டிக்கெட் புக்கிங்கில் சாதனையை படைத்துவருகிறது. ஒட்டுமொத்தமாக அட்வான்ஸ் புக்கிங்கில் இதுவரை 100 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் சரசரவென்று டிக்கெட் காலியிருக்கின்றன. இவை தவிர்த்து இதர வியாபாரங்களும் படு ஜோர்தான். மேலும் முதல் நாளில் கண்டிப்பாக வசூல் குவியும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஆயிரம் கோடி ரூபாயை படம் கண்டிப்பாக வசூலிக்கும் எனவும் பலரால் கருதப்படுகிறது.
ரஜினிக்கு நிம்மதி: படத்தை நேற்றுதான் ரஜினி, அவரது மனைவி, கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் சன் அலுவலகத்தில் இருக்கும் திரையரங்கில் பார்த்தார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தை பார்த்த அனைவருக்கும் திருப்தி என்றும்; மேலும் இன்னொரு படத்தை லோகேஷுடன் செய்தால் என்ன? என்ற எண்ணமும் ரஜினிக்கு எழுந்திருப்பதாக தெரிகிறது. லோகேஷை பொறுத்தவரை கூலி வெற்றியடைய வேண்டி கோயில்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் விமர்சனம்: இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூலி படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பிறகு அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திரைத்துறயில் 50 வருடங்கள் நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்துகள். கூலி மிகப்பெரிய மாஸ் என்ட்டெர்டெயினர் படம்" என்று தெரிவித்திருக்கிறார்.அவரது இந்த விமர்சனத்தை பார்த்த ரசிகர்களோ, 'இதுவரை படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பராக இருக்கிறது' என்றுதான் சொல்கிறார்கள். நிச்சயம் படம் சம்பவம் செய்யப்போவது உறுதி என அடித்து கூற தொடங்கியிருக்கிறார்கள். மேலும் உதயநிதி ஸ்டாலின் படத்தை புகழ்ந்ததற்கு லோகேஷ் கனகராஜ் தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











