Loki: SKவின் அந்த படம் இயக்குநருக்கே பிடிக்கல.. ரொம்ப யோசிச்சுட்டு இருக்காரு.. லோகேஷ் கனகராஜ் ஓபன்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் படத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் இல்லாமல், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், உபேந்திரா என பல மொழி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத்தின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறிப்பாக தனது நண்பரும் இயக்குநருமான மடோன் அஸ்வின் குறித்தும் அவர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்றிய மாவீரன் படம் குறித்தும் பகிர்ந்து கொண்டது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அந்த பேட்டியில், " நானும் மடோன் அஸ்வினும் படங்கள் இயக்குவதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். அதாவது, யார் முதலில் படம் இயக்குகிறாரோ, அவருக்கு மற்றொருவர் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் அது.

மடோன் அஸ்வின்: அப்படி இருக்கும்போது, நான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை நான் ஆறு படங்கள் எடுத்துள்ளேன். இதை பலரும் நான் படங்கள் எடுக்க ரொம்ப டைம் எடுத்துக் கொள்வதாக கூறுகிறார்கள். ஆனால் எனது நண்பன் மடோன் அஸ்வின் என்னை விட பொறுமையானவர். நான் மாநகரம் படம் எடுக்கத் தொடங்கியபோதே, அவர் மண்டேலா படத்திற்கு கதை எழுத ஆரம்பித்துவிட்டார். நான் கமர்ஷியல் இயக்குநராக இருப்பதால் ஏதாவது அப்படி இப்படி என படத்தை தேத்தி விடலாம். ஆனால் மடோன் அஸ்வினுக்கு அப்படி எல்லாம் எதுவும் கிடையாது.
சிவகார்த்திகேயன் படம்: மிகவும் யோசித்து, அரசியல் ரீதியாக படம் சரியாக இருக்க வேண்டும் என ரொம்பவும் கவனமாக இருப்பார். அதேபோல், முதல் படத்திலேயே தேசிய விருது வாங்குவேன் என்று கூறினார், அதேபோல் மண்டேலாவுக்கு வாங்கினார். மடோன் அஸ்வின் இப்போதும் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பது, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய மாவீரன் படம் குறித்து தான். மாவீரன் படத்தை ரொம்பவும் கமர்ஷியலாக எடுத்துவிட்டோம் என ரொம்பவும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் மூன்றாவது படத்துக்கு ரொம்பவும் டைம் எடுத்து கதை எழுதிக் கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மடோன் அஸ்வின் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியது பலருக்கும் ஷாக் அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசை- டிரைலர்: கூலி படம் குறித்து அவர் மேலும் பேசுகையில், " கூலி படத்தின் படப்பிடிப்பு வேலைகளை சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னரே முடித்துவிட்டோம். கடந்த இரண்டு நாட்களாக தான் படத்தின் டிரைலர் கட் செய்யும் பணிகளை செய்து வருகிறோம். டிரைலர் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ஆகஸ்ட் 2ஆம் தேதியே நடைபெறவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











