Coolie first single: ஜூன் 25ந் தேதி சம்பவம் ரெடி.. கூலி படத்தின் தாறுமான அப்டேட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு வைப்' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாகி பட்டையை கிளப்பி இருக்கும் நிலையில், தற்போது முழு பாடல் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சஸ் அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து முடிந்துள்ளார். நாகார்ஜுனா, சத்யராஜ், பாலிவுட் நடிகர் அமீர் கான், கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் படம் ஆகஸ்ட் 14ந் தேதி, பான் இந்திய திரைப்படமாக தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் புதிய வீடியோவை அண்மையில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா அனைவரும் மாஸாக நடந்து செல்ல, பின்னணியில் அரங்கம் அதிரட்டுமே... விசுலு பறக்கட்டுமே என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. இதில், ரஜினிகாந்த் தளபதி படத்தில் வருவது போல இருந்தார்.

சூப்பர் ஸ்டாரின் கூலி: கூலி படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் இறுதிக்கட்ட பணி நடந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து படத்தின் முதன் பாடலான 'சிக்கிட்டு வைப்' ஜூன் 25ஆம் தேதி மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனிருத் மாஸாக காரில் இருந்து இறங்கி 'முடிச்சிடலாமா' என கேட்டு விட்டு, கை கடிகாரத்தால் செய்த மாலையை கையில் எடுத்து செல்கிறார். அப்போது, சாண்டி மாஸ்டர் என்ட்ரி கொடுத்து, என்ன இது.. அது வேற சாங்கு, இது வேற வைப் என சொல்லுகிறார். இந்த கிளிம்ஸ் வீடியோவே செம மாஸாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 2 மாதம் இருக்கும் நிலையில், இப்போதே படத்தின் ப்ரோமோஷன் வேலையை படக்குழு தொடங்கி விட்டது.
அனிருத் இதுவரை ரஜினிக்கு பேட்ட, தர்பார், ஜெயிலர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் வரும் அனைத்தும் பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜெயிலர் படத்தில் வரும் ' சூப்பர் ஸ்டாருடா' பாடல் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றது. அந்த வரிசையில் கூலி திரைப்படத்தின் பாடல்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் பாசில், ஷிவராஜ்குமார் என பலர் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











