Coolie vs War 2 - வாரி சுருட்டிய கூலி.. ஹிந்தியில் மாஸ் சாதனை படைத்த ரஜினி..சூப்பர் ஸ்டார்னா கெத்து
மும்பை: ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் மிகப்பெரிய ஓபனிங்கை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறது. டிக்கெட் புக்கிங்கில் நாளுக்கு நாள் சாதனைகளை படைக்க ஆரம்பித்திருக்கிறது படம். இதனால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாயை படம் வசூலித்துவிடும் என்பது பெரும்பாலானோரின் கணிப்பு. இந்நிலையில் ஹிந்தியில் மாஸ் காண்பிக்க ஆரம்பித்திருக்கிறது கூலி.
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார். இந்திய திரைத்துறையிலேயே அதிகம் எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் படங்களில் ஒன்றாக கூலி மாறியிருக்கிறது. ஏனெனில் நாட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரும், டாப் இயக்குநர்களில் ஒருவரும் சேர்ந்து படம் செய்திருக்கிறார்கள். கண்டிப்பாக கூலி மிகப்பெரிய மைல் கல்லை திரைத்துறையில் பதிக்கும் என்ற உத்தரவாதத்தை திரை ஆர்வலர்கள் கொடுத்துவருகிறார்கள்.
மாஸ் ஓபனிங்: படத்தின் டிக்கெட் புக்கிங் சமீபத்தில்தான் தொடங்கியது. கேரளாவில் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. விஜய்தான் அங்கு மாஸ் என்று பலரும் சொல்லிய சூழலில்; ரஜினிகாந்த் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்துவிட்டார். அதேபோல் தமிழ்நாட்டிலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய கொஞ்ச நேரத்தில் புக் மை ஷோ சர்வர் க்ராஷ் ஆகிவிட்டது.

எத்தனை டிக்கெட்டுகள்: இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் டிக்கெட்டுகள் ஜோராக விற்கின்றன. வட அமெரிக்காவில் இதுவரை 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டனவாம். இவ்வளவு சீக்கிரத்தில் 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்ற தமிழ் படம் என்ற பெருமையையும் கூலி பெற்றிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க கிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வார் 2 படமும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
கூலி Vs வார் 2: வார் 2விலும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். எனவே கூலி டிக்கெட் முன்பதிவுக்கு போட்டியாக வார் 2வும் திகழ்ந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க கூலி திரைப்படம் ஹிந்தியில் மாஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதாவது புக்கிங் தொடங்கிய முதல் நாளில் 13,500 டிக்கெட்டுகள்வரை விற்று தீர்ந்துவிட்டன. இந்நிலையில் இப்போதுவரை மொத்தமாக ஆறு கோடி ரூபாய்க்கு ஹிந்தியில் டிக்கெட்டுகள் புக் ஆகியிருக்கிறதாம்.
150 கோடி ரூபாய் வசூல்: இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் டிக்கெட் புக்கிங்கிலேயே படம் வசூலித்துவிட்டது. எனவே முதல் நாள் வசூலையும் சேர்த்தால் நிச்சயம் ஆகஸ்ட் 14ஆம் தேதி 150 கோடி ரூபாய்வரை படம் வசூலிக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர்கள் கணக்கு போட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் லீடிங்கில் இருந்த வார் 2 டிக்கெட் புக்கிங் இப்போது கூலியிடம் பின்னடைவை சந்தித்துவிட்டதாகவும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











