Coolie Overseas Review: கூலி - போலி.. வெளிநாட்டில் இருந்து வந்து விழுந்த ஷாக்கிங் விமர்சனம்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக, ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளிநாடுகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம், வட அமெரிக்கா போன்ற பகுதிகளில் ஆகஸ்ட் 13 மாலை 6:30 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4 மணி) திரையிடப்பட்டது.

தமிழகத்தில் காலை 9 மணி முதல் 'கூலி' திரைப்படத்தின் முதல் காட்சிகள் தொடங்குகின்றன. கேரளாவில் காலை 6 மணிக்கே படக்காட்சிகள் ஆரம்பமாகி விட்டன. பிற மாநிலங்களில், உள்ளூர் விநியோக அட்டவணைகளுக்கு ஏற்ப வெளியீட்டு நேரங்கள் வேறுபடுகின்றன. வெளிநாடுகளில் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Coolie Overseas Review in Tamil Fans and Critics says Okayish first half

ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி', செப்டம்பர் 2023 இல் 'தலைவர் 171' என்ற தற்காலிக தலைப்பில் அறிவிக்கப்பட்டது. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ஏப்ரல் 2024 இல் வெளியிடப்பட்டது. ஜூலை 2024 இல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் மற்றும் பாங்காக்கிலும் நடைபெற்றது. படப்பிடிப்பு மார்ச் 2025 இல் நிறைவடைந்தது.

இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாகார்ஜுனா சைமன் ஆகவும், சௌபின் ஷாஹிர் தயால் ஆகவும், உபேந்திரா கலீஷா ஆகவும், ஸ்ருதி ஹாசன் பிரீத்தி ஆகவும், சத்யராஜ் ராஜசேகர் ஆகவும், அமீர் கான் தஹா ஆகவும் நடித்துள்ளனர். ரச்சிதா ராம், ஜூனியர் எம்ஜிஆர், சார்லி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பூஜா ஹெக்டே "மோனிகா" பாடலுக்கு நடனமாடியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார். லோகேஷ் கனகராஜ் மற்றும் சந்துரு அன்பழகன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர். ஓவர்சீஸில் படம் பார்த்த ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

கிறிஸ்டோபர் கனகராஜ் விமர்சனம்: அமெரிக்காவில் இருந்து தமிழ் படங்களை பார்த்து விமர்சனம் செய்து வரும் கிறிஸ்டோபர் கனகராஜ் அதிகாலையிலேயே கூலி படத்தின் முதல் காட்சியை பார்த்த நிலையில், முதல் பாதி ஓகே என விமர்சனம் கொடுத்துள்ளார். ஜெயிலர் படத்துக்கு வின்னர் என விமர்சனம் கொடுத்த இவர், ரஜினிகாந்தின் நடிப்பு, நாகார்ஜுனாவின் ஸ்டைல், ஸ்ருதியின் பர்ஃபார்மன்ஸ், அனிருத்தின் 4 பாடல்கள் மஜா என்றும் ஆனால், கதைதான் ஆங்காங்கே கனெக்ட் ஆகவில்லை என தனது முதல் பாதி விமர்சனத்தை கொடுத்துள்ளார். மேலும், கூலி திரைப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ரெண்டாவது பாதி வெயிட்டா இருக்கணும்: கூலி படத்தின் முதல் பாதி டீசன்ட்டாக உள்ளதாக இங்கிலாந்தில் இருந்து இந்திய படங்களை பார்த்து விமர்சித்து வரும் ஏபி ஜார்ஜ் விமர்சனம் அளித்துள்ளார். மேன்சன் ஃபைட்டுக்கு ஃபயர் விட்டிருக்கும் இவர், 2வது பாதி வெறித்தனமாக இருந்தால் மட்டுமே படம் பிளாக்பஸ்டர் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூலி - போலி: கூலி திரைப்படத்தின் 2ம் பாதியும் முடிந்த நிலையில், கிறிஸ்டோபர் கனகராஜ் கூலி - போலி என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வது நல்லது எனக்குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்டோபர் கனகராஜ் ஒரு விஜய் ஃபேன் என ரஜினி ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X