Coolie: ரெக்கார்ட் ஆயிருக்குடா கிறுக்கா டேய்.. என்னங்க லோகேஷ் கனகராஜ் இவ்வளவு ஃபன்னா இருக்காரு!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கூலி. இந்த படத்தின் புரோமோஷன் வேற லெவலில் நடந்து கொண்டு உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஜாலியாக கிரிக்கெட் விளையாடி படத்தின் புரோமோஷன் வேலைகளைச் செய்துள்ளார்கள். அது தொடர்பான முன்னோட்டம் சன் டிவி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கூலி படத்தை சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் ரஜினிகாந்த்தின் 171வது படம். மேலும் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ளதால், கூலி படம் மிகவும் சிறப்புமிக்க படமாக பார்க்கப்படுகிறது. படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக தயாரிப்பு நிறுவனம் பல வேலைகளைச் செய்து வந்தாலும், அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டு ஒரு வழி செய்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். படம் குறித்து அதிகப்படியான பேட்டிகள் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது செம ஜாலியாக படத்தின் புரோமோஷனை மேற்கொண்டுள்ளது படக்குழு.

டர்ஃப் கிரிக்கெட்: அதாவது லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது டீம் இணைந்து சாஃப்ட் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டே, படம் குறித்து ஜாலியாக பேசி புரோமோஷன் செய்கிறார்கள். இந்த புரோமோஷன் நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சன் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ்: அந்த வீடியோவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது உதவி இயக்குநர்கள், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் என பலரும் உள்ளார்கள். அதில் தனது அணியில் விளையாடிக் கொண்டு இருந்த பிரவின் என்ற உதவி இயக்குநரை நோக்கி, "பிரவின் டே அவுட்ரா டே... ரெக்கார்ட் ஆகியிருக்குடா கிறுக்கா டே" எனவும் கூறுகிறார். இதைப் பார்த்த இணையவாசிகளோ, என்னது கிரிக்கெட்ல லோகேஷ் கனகராஜ் இந்த அளவுக்கு செம ஜாலியா இருக்காரு என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

சாண்டி மாஸ்டர்: அதேபோல், சாண்டி மாஸ்டர் கூறும் போது, சிக்குடு வைப் பாடலின் கடைசியில் ரஜினி சார் ஒரு ஸ்டெப் போடுவார் அதை திரையில் ரசிகர்களுடன் பார்க்க நான் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று கூறினார். ஏற்கனவே மோனிகா பாடலில், பூஜா ஹெக்டே, சௌபின் சாஹிர் உள்ளிட்டோரை சூப்பராக நடனமாட வைத்திருந்தார். இந்நிலையில் சாண்டி மாஸ்டரே சிக்குடு வைப் பாடல் குறித்து கூறியுள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











