Rajini: 50 வருஷமா ஜெயிக்கிற குதிரை.. ரஜினியை மாத்தி மாத்தி புகழும் கமல்ஹாசன், ஹ்ரித்திக் ரோஷன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே இந்திய சினிமா உலகில் ஹாட் டாபிக். 50 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் ஜொலித்து வரும் சூப்பர் ஸ்டாரின் 171 வது படமான கூலி படம் நாளை அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் பலரும் படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள். அதே நேரத்தில் ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற கருப்பு வெள்ளை படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாளை மறுநாள் உடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இப்படி இருக்கும்போது, இவரது ரசிகர்களுக்கு ரஜினியின் 50வது ஆண்டு சினிமா வாழ்க்கையை அதாவது ரஜினியிசத்தை கொண்டாடும் வகையில் கூலி படம் வெளியாகவுள்ளது.

படம் ப்ரீ ரிலீஸிலேயே பல நூறு கோடிகளை வசூலித்து விட்டது. அதேபோல், டிக்கெட் முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிகளை எட்டியுள்ளது எனவும் கூறப்படுகிறது. நாளைய தினத்தில் இந்திய அளவில் இரண்டு படங்கள் மட்டுமே பேசுபொருள். ஒன்று ரஜினியின் கூலி, மற்றொன்று ஹ்ர்த்திக் ரோஷனின் வார் 2. இந்நிலையில் ரஜினி தனது 50 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையை கொண்டாடுவதால், திரைத்துறையில் தொழில் ரீதியாக ரஜினிக்கு நேர் எதிராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். கமல், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்: அவரது வாழ்த்தில், " திரையுலகில் 50 ஆண்டுகளாக முத்திரை பதித்த எனது நண்பர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள். நம் சூப்பர் ஸ்டாரை நான் பாசத்துடனும் பெருமையுடனும் கொண்டாடுகிறேன். சினிமாவில் அவரது பொன் விழாவுக்கு ஏற்றவாறு கூலி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை குவிக்க வாழ்த்துகள். திறமையான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திரைத்துறையின் தூணாக உள்ள தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், நீண்ட கால நண்பர்கள் சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், மகள் ஸ்ருதிஹாசன் என அனைவருக்கும் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹரித்திக் : அதேபோல், நாளை வெளியாகவுள்ள படமான வார் 2 படத்தின் நாயகன் ஹ்ரித்திக் ரோஷன் தனது எக்ஸ் பக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில்," ஒரு நடிகனாக எனது முதல் அடியை உங்களுக்கு அருகில் இருந்து தான் எடுத்து வைத்தேன். எனது முதல் ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து உத்வேகமாகவும் தரமாகவும் இருங்கள். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். இவர்களது வாழ்த்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இணையவாசிகள் இவர்களின் வாழ்த்துகளைப் பார்த்துவிட்டு, திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக சக போட்டியாளராக இருக்கும் கமல்ஹாசனும், ரஜினியின் கூலி படத்திற்கு போட்டியாளராக உள்ள வார் 2 படத்தின் ஹ்ர்த்திக் ரோஷனும் மாறி மாறி வாழ்த்துறாங்களே என பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











