Rajini: தலைவா Face காட்டுங்க.. விமானத்தில் சத்தம் போட்ட ரசிகர்.. ரஜினி என்ன செய்தார்னு பாருங்க!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு உள்ளது. படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கிடையில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரூபாய் 1000 கோடிகளை ரஜினிகாந்த் ஈட்டித் தருவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் விமானத்தில் ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் செய்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கூலி படம் ரஜினிகாந்த்தின் 171வது படம். இது மட்டும் இல்லாமல், சினிமாவில் இவர் காலடி எடுத்து வைத்து, 50 ஆண்டுகள் ஆகியுள்ளதால், 50 வது ஆண்டில் ரிலீஸ் ஆகும் படமாக இந்த படம் உள்ளது. ஏற்கனவே கூலி படத்துடன் ஜெயிலர் 2 படமும் 50வது ஆண்டு கொண்டாட்டமாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டதால், ஜெயிலர் 2 இந்த ஆண்டு வெளியாகாது. கூலி மற்றும் ஜெயிலர் 2 என இரண்டு படங்களுக்குமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பு நிறுவனம்.

Coolie Rajinikanth Spotted at Flight By Fans Video Goes Trending On Social
Photo Credit:

கூலி படக்குழு: கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், ஆமிர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். கடந்த வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் பல விஷயங்களைப் பேசினார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் கதை சொல்ல வரும்போது என்ன செய்தார் என்பதை மிகவும் நகைச்சுவையாக கூறினார்.

ரஜினி கலாய்: அதாவது, " ஜெயிலர் படத்தின் கதை சொல்ல நெல்சன் வந்தபோது, ' ஒரு நல்ல காஃபி வேணும் ' என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல வந்தார். வந்தவர், சார், நான் கமல் சாரின் தீவிர ரசிகர் எனக் கூறினார். நான் எதற்காக லோகேஷ் கனகராஜை அழைத்திருக்கிறேன். கதை சொல்லத்தானே. வந்தவர் கதையைச் சொல்ல வேண்டியதுதான். நான் கேட்டேனா அவர் யாருடைய ரசிகர்னு" என்று நகைச்சுவையாக பேசினார். இது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோ: இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா விரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானத்தில் சென்ற போது, அவரை விமானத்தில் பார்த்த ரசிகர் ஒருவர் அவரை வீடியோ எடுத்தார். அதற்குள் ரஜினி தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். உடனே ரசிகர் தலைவா Face காட்டுங்க எனக் கத்தினார். ரசிகரின் குரல் கேட்டதுமே, ரஜினிகாந்த் எழுந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து, சிரித்தார். உடனே விமானத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X