ரோலக்ஸை விட சைமன் மிரட்டினாரா?.. விஜய்சேதுபதி சந்தனம், அர்ஜுன் தாஸ் அன்பு ரோல் அளவுக்கு கூட இல்லையே?
சென்னை: படத்தை பக்காவாக எடுக்காமல் முன்னணி இயக்குநர்கள் என அதிக பட்ஜெட்டில் உச்ச நடிகர்களை வைத்துக் கொண்டு வர வர இயக்குநர்கள் காமெடி பண்ணிக் கொண்டு இருக்கின்றனர் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொந்தளித்து வருகின்றனர். ரோலக்ஸ் கதாபாத்திரத்தை விட சைமன் கதாபாத்திரம் கொடூரமாக இருக்கும் என லோகேஷ் கொடுத்த பில்டப்புக்கு கடைசியில் சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையா தீபாவளி துப்பாக்கி மீம் தான் டிரெண்டாகி வருகிறது.
நாகார்ஜுனா ஆரம்பத்திலேயே கதையை கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என ஏன் சொன்னார் என்பது இப்போது புரிகிறது என நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர். 6 முறை வில்லன் கேரக்டர் ஆர்க்கை லோகேஷ் கனகராஜ் மெருகேற்றியே இந்த அளவுக்கு காமெடி பீஸ் வில்லனாகத்தான் காட்ட முடிகிறது என்றால், முதல் முறை நாகார்ஜுனாவுக்கு அவர் எடுத்துச் சென்ற டிராஃப்ட் எந்தளவுக்கு மட்டமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தாலே சிரிப்பு தான் வருகிறது.

குபேரா படத்தில் கூட நாகார்ஜுனா பர்ஃபார்மன்ஸ் நன்றாக இருந்தது என்றும் கூலி படத்தில் அவரை கூப்பிட்டு வந்து அவரது ரட்சகன் இமேஜை டோட்டல் டேமேஜ் செய்து விட்டாரே லோகி என ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளியே வருகிறது.
நாகார்ஜுனா செம காமெடி வில்லன்: சரக்கடிப்போம், தம்மடிப்போம் என்பதை மட்டுமே திரைக்கதையாக நினைத்துக் கொண்டு நாகார்ஜுனாவின் கண்களை ரெட் ஆக்கிவிட்டால் போதும், ரசிகர்கள் எல்லாம் பயந்துவிடுவார்கள் என நினைத்து விட்டாரா லோகேஷ் கனகராஜ் என்று தெரியவில்லை. தனது மகன் காதலிப்பது பற்றி தெரியவில்லை. அந்த காதலி எப்படி பட்டவள் என்பது பற்றி தெரியவில்லை. தன்னுடைய தளபதி போல இருப்பவன் ஒரு உளவாளி என்பது கூட தெரியவில்லை. கூட இருக்கும் அல்லக் கைகள் கூட விசுவாசமாக இல்லாமல், தனியாக டீல் பேச, அதையும் கண்டு பிடிக்க முடியாமல் ஒரு வொர்ஸ்ட் வில்லன் கேரக்டர் ஆர்க்கை கொடுத்து லோகேஷ் கனகராஜ் நாகார்ஜுனாவை முதல் முறையாக வில்லனாக நடிக்க வைத்து நல்லா காமெடி செய்து விட்டார் என்றே ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
கைதி அர்ஜுன் தாஸ்: லைஃப் டைம் செட்டில்மெண்ட் டா என கைதி படத்தில் அன்புவாக அர்ஜுன் தாஸ் தனது வெறித்தனத்தை காட்டிய நடிப்பைக் கூட கூலி படத்தில் சைமன் கதாபாத்திரத்தில் நடித்த நாகார்ஜுனாவிடம் இருந்து கிடைக்கவில்லை என்றே கூலி படத்தை பார்த்த ரசிகர்கள் நாகார்ஜுனாவை லோகேஷ் கனகராஜ் எந்தளவுக்கு வீணடிக்க முடியுமோ அந்தளவுக்கு வேஸ்ட் பண்ணிட்டார் என விளாசி வருகின்றனர்.
விக்ரம் விஜய்சேதுபதி: அதே போல விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக ஆட்டோவில் இருந்து சட்டை இல்லாமல் அறிமுகமாகும் காட்சி அவருக்கான ஃபேமிலி என அனைத்தும் சரியாக காட்டியிருப்பார். ஆனால், இங்கே நாகார்ஜுனாவின் மனைவி யார்? அவருக்கு என்ன ஆனது? மகன் ஏன் சாதாரண கஸ்டம் ஆஃபிசராக இருக்கிறார் என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ரோலக்ஸ் தான் பெஸ்ட்: அர்ஜுன் தாஸ், விஜய் சேதுபதிக்கு மேல் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை காட்டும் போது 24 படத்தில் அவர் வில்லன் ஆத்ரேயாவாக நடித்த நிலையிலும், அதையே தூக்கி சாப்பிடும் பர்ஃபார்மன்ஸை நடிப்பின் நாயகன் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால், கூலி படத்தில் ரோலக்ஸ் ரோலுக்கு இணையாக கூட சைமன் கதாபாத்திரமோ அல்லது கடைசியாக அரை டவுசர் அணிந்துக் கொண்டு நாய்களுடன் வாக்கிங் வரும் அமீர்கானின் தாஹா கதாபாத்திரமோ எழுதப்படவில்லை என்பதால் தான் ரசிகர்கள் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜை தமிழ் சினிமாவின் ராஜமெளலி என நம்பி தவறு செய்துவிட்டோம் என புலம்பி வருகின்றனர்.
லியோ படத்தை தொடர்ந்து சொதப்பல்: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படம் எடுத்த போதே ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார். அந்த விமர்சனத்துக்கு எல்லாம் கூலி பதிலடி கொடுக்கும் என்றும் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்தது மட்டும் தான் லியோ படம் சொதப்ப காரணம் என்றெல்லாம் லோகேஷ் உருட்டிய உருட்டுகள் இன்று அம்பலமாகி நிற்பதாக நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் ரஜினிக்காக நிரம்பிவிடும் என்பது தனிக்கதை.


Click it and Unblock the Notifications











