கூலி vs ஜன நாயகன்.. ஓவர்சீஸ் மார்க்கெட்டில் இப்பவே செம போட்டியாம்.. அதிக லாபத்தை அள்ளப்போறது யாரு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வழியாக உள்ள படங்கள் தான் தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவிக்கும் படங்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியான நிலையில், அந்த படங்கள் எதுவும் பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைக்க முடியாமல் திணறின.

அஜித் குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் தயாரிப்பாளர்களே சந்தோஷப்படுத்தவில்லை என்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் தான் இதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Coolie vs Jana Nayagan A strong battle at Overseas Business
Photo Credit:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் தக் லைஃப், சூர்யாவின் ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் சுமாரான வசூலை தான் பெற்றன. கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் டிசாஸ்டர் ஆனது. இந்த ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படமாக ரஜினிகாந்தின் கூலி படம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் என்கின்றனர்.

லோகேஷ் கனகராஜை நம்பும் ரசிகர்கள்: மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் மூலம் தான் யார் என்பதை முழுமையாக நிரூபித்துக் காட்டியிருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு முன்னணி நடிகர்களான விஜய், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தன. மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என தொடர்ந்து மேக்கிங் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி கொடி நாட்டி வருகிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் அவுட்டேட்டட் ஆகியுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் படமாக கூலி படத்தை கொடுப்பார் என பெரிதும் நம்புகின்றனர்.

சூப்பர் ஸ்டார் இருக்க பயமேன்: நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அந்த படத்தை தொடர்ந்து, லைகா தயாரிப்பில், லால் சலாம் மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். ஆனால் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. இடம் இயக்குநர்களை பெரிதும் நம்பி இருக்கும் ரஜினிகாந்த் கூலி படத்தின் மூலம் வசூல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்ட்டி ஹீரோ படம்: ஜெயிலர், வேட்டையன் படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமீர்கான், டோலிவுட் நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாஹீர், கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஜெயிலர் படத்தைப் போல அதிக வசூல் பேட்டை இந்த படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நாகர்ஜுனா அளித்த பேட்டியில், விக்ரம் படத்தை போல ஒவ்வொரு நடிகர்களுக்கும் தரமான கதாபாத்திரங்களை லோகேஷ் கனகராஜ் செதுக்கியிருக்கிறார் என்றார்.

Coolie vs Jana Nayagan A strong battle at Overseas Business
Photo Credit:

ஓவர் சீஸ் பிசினஸ்: வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்திற்கு வெளிநாட்டில் இப்போதே சில முன்னணி நிறுவனங்கள் பெரிய தொகை கொடுத்து வாங்க போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு 70 முதல் 80 கோடி கொடுத்து வாங்க ரெடியாக இருக்கிறார்களாம். ஆனால், சன் பிக்சர்ஸ் 100 கோடி வரை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜன நாயகன் படத்துக்கும் போட்டி: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் விஜய் நடித்த ஜன நாயகன் படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், அந்த படத்தின் ஓவர்சீஸ் பிசினஸும் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர். லியோ, கோட் என வரிசையாக பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்களை விஜய் கொடுத்து வரும் நிலையில், அந்த படத்தையும் ஓவர்சீஸில் 100 கோடிக்கு மேல் விற்க கேவிஎன் நிறுவனம் முயற்சித்து வருகிறதாம். வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் அப்டேட் வெளியாகவுள்ள நிலையில், அனிருத் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் களமிறக்க ரெடியாகி விட்டார். யூடியூப் டிரெண்டிங் மற்றும் ஆன்லைன் ரசிகர்கள் மோதல் என இந்த வாரம் சூடு பிடிக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X