Coolie Vs War 2: என்ன டைமிங்டா சாமி.. அலப்பறை செய்த Jr.NTR ரசிகர்கள்.. மாஸாக வந்த கூலி மெட்ரோ டிரைன்

ஹைதராபாத்: வரும் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட் காத்துள்ளது. அதாவது, ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஆமிர் கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படமும், ஹர்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான வார் 2 படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் படக்குழுவினர் இரண்டு படங்களுக்கும் அதிக அளவில் புரோமோஷன் செய்து வருகிறார்கள். வரும் 14ஆம் தேதி ரசிகர்கள் என்ன மாதிரியான மன நிலையில் இருப்பார்கள் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.அதாவது ஹைதராபாத்தில் வார் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள். மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டு இருந்தார்கள்.

Coolie Vs War 2 Jr NTR Fans Shouting at Metro Station Metro Train Arrives With Coolie Poester Video

கூலி டிரைன்: அனைவரும் ஜூனியர் என்.டி.ஆர் என கத்திக் கொண்டு இருந்தார்கள். அப்படி இருக்கும்போது, கூலி படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்ட மெட்ரோ டிரைன் அங்கு வந்து நிற்க, மொத்த ரயில் நிலையமும் ஆரவாரம் செய்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் என்ன டைமிங்கில் டிரைன் வந்து நிற்கிறது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபீஸ்: தெலுங்கு சினிமாவில் இருந்த ஜூனியர் என்.டி.ஆர் நேரடியாக நடிக்கும் முதல் பாலிவுட் படம் வார் 2. இதனால் இந்த படத்திற்கு தென்னிந்திய அளவில் குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிக வசூல் குவிக்கும் என படக்குழு நம்புகிறது. அதேபோல், கூலி படத்தில் வில்லனாக நடித்துள்ள நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவின் முடிசூடா மன்னன். இவரது ரசிகர்களும் கூலி படத்தின் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ புக்கிங்கில் உலக அளவில் கூலி படத்திற்கு இதுவரை ரூபாய் 60 கோடிகள் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், வார் 2 படம் இதுவரை 6.5 கோடிகள் தான் வசூலித்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X