Coolie vs War 2: மவனே யாரு கிட்ட.. ஓவர்சீஸில் வார் 2வை பந்தாடும் கூலி.. நார்த் அமெரிக்காவில் ரஜினி ராஜ்ஜியம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே இந்தியாவில் எந்தளவுக்கு ஹைப் இருக்கிறதோ அதே அளவுக்கு வெளிநாடுகளிலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எகிறிவிடும். முதல் நாள் வசூல் பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. இந்த முறை சூப்பர் ஸ்டார் படம் என்றால் என்ன ஒரு கை பார்த்துவிடலாம் என ஜூனியர் என்டிஆருடன் கைகோர்த்து ஹ்ரித்திக் ரோஷன் தனது வார் 2 படத்தை இறக்குகிறார்.

நிஜமாகவே வார் 2 போல கூலிக்கும் வார் 2 படத்துக்கும் இடையே பெரிய பாக்ஸ் ஆபீஸ் வார் நடக்கும் என தெரிகிறது. இந்தியாவை தாண்டி ஓவர்சீஸ் வசூலிலும் யாரு பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா என்பதற்கான போட்டிகள் இப்போதே ஆரம்பித்து விட்டன.

Coolie vs War 2 North America Box Office Rajinikanth movie beats Hrithik Roshan and Jr NTR movie
Photo Credit:

வார் 2 படத்தை விட ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தான் நார்த் அமெரிக்காவில் அதிக டிக்கெட்டுகளை விற்றுள்ளதாகவும் அதிக அமெரிக்க டாலர்களை ப்ரீமியர் காட்சிக்காக ஈட்டியிருப்பதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருப்பது தலைவர் ரசிகர்களை தலை கால் புரியாமல் ஆட வைத்து வருகிறது.

55 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை: நார்த் அமெரிக்காவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கூலி படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என போட்டிப் போட்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்களாம். இதுவரை 55 ஆயிரம் டிக்கெட்டுகள் கூலி படத்துக்காக விற்பனையாகி இருப்பதாக கூறுகின்றனர். அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 1.3 மில்லியன் டாலர் வசூலை இதுவரை கூலி படம் ஈட்டியிருப்பதாகவும் இன்னும் படம் வெளியாக ஒரு வாரம் உள்ள நிலையில், 2 மில்லியன் டாலர் எல்லாம் சூப்பர் ஸ்டாருக்கு சப்ப மேட்டர் சால்ட் வாட்டர் என்கின்றனர். ப்ரீமியர் ஷோவில் பெரிய சாதனையையும் கூலி திரைப்படம் படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வார் 2 வசூல் நிலவரம்: அதே நேரத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 திரைப்படம் இதுவரை 2.3 லட்சம் அமெரிக்க டாலர் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இன்னமும் ஒரு வார காலம் படம் ரிலீஸாக உள்ள நிலையில், இந்த வசூல் நிலை மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் ஓவர்சீஸில் கூலி படம் தான் வசூலில் வார் 2வை முந்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X