Coolie Vs War 2: இன்னும் 3 நாளில் படம் ரிலீஸ்.. புக்கிங்கில் கிங் யாரு? கூலியா.. இல்லை.. வார் 2 வா?

சென்னை: வழக்கமாகவே ஒரு முக்கியமான நாள் அல்லது ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் ஒரு திரையுலகில் இரண்டு படங்கள், அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே, ரசிகர்களுக்கு இடையில் எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். இப்படி இருக்கும்போது மொத்த இந்திய சினிமா உலகங்களும் தற்போது மிகப்பெரிய கிளாஸ்க்கு தயாராகி வருகிறது. இதில் எந்த படத்திற்கு புக்கிங் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இம்முறை இந்திய அளவில் மோதிக் கொள்வது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி மற்றும் ஹர்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான வார் 2 படமும் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த இரண்டு படங்களும் இண்டஸ்ட்ரி ஹிட் என்பதைக் கடந்து, பான் இந்தியா வெற்றிக்காக கடுமையாக உழைப்பைப் செலுத்தி உள்ளார்கள். இப்படி இருக்கும்போது இந்த இரண்டு படங்களுக்கும் புக்கிங் வேற லெவலில் தொடங்கி உள்ளார்கள்.

Coolie Vs War 2 Worldwide Advance Booking Update ONE-Sided Clash WHO Is Dominating Tickets Pre-Sales
Photo Credit:

கூலி: அதாவது, இந்தியா மட்டும் இல்லாமல் இரண்டு படங்களுக்கும் உலகம் முழுவதும் புக்கிங் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்து 50 வது ஆண்டில் கூலி படம் வெளியாகிறது. இந்நிலையில் சினிமா வர்த்த ஆய்வாளர் சுமித் கடேல் தனடு எக்ஸ் பக்கத்தில் கூலி படம் நேற்று அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10.30 மணி வரை உலகம் முழுவதும் ரூபாய் 60 கோடிகள் வசூல் செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Coolie Vs War 2 Worldwide Advance Booking Update ONE-Sided Clash WHO Is Dominating Tickets Pre-Sales
Photo Credit:

வார் 2: அதேபோல், வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள வார் 2 படத்தை பாலிவுட் உலகில் மிகவும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹர்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார்கள். படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, இப்படி இருக்கும்போது, இந்த படம் நேற்ற்ய் அதாவது, ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10.30 மணி வரை உலகம் முழுவதும் ரூபாய் 6.5 கோடிகள் தான் முன் பதிவில் வசூல் செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைவரு களத்துல: இவரது இந்த எக்ஸ் பதிவைப் பார்க்கும்போது முன் பதிவில் தற்போது முன்னிலை மட்டும் இல்லாமல் வெற்றி கண்டுள்ள படமாக சூப்பர் ஸ்டாரினின் கூலி படம் தான் உள்ளது. இதைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள், " தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால் இரண்டு படங்களுக்கும் புக்கிங் மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாகும் நாளுக்கும் இரண்டு படங்களுக்கும் புக்கிங் மேலும் அதிகரித்திருக்கும். இரண்டு படங்களும் ரூபாய் 1000 கோடி டார்கெட்டை நோக்கி திட்டம் போட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X