இதெல்லாம் தேவையா? பர்த் டே கேக்கை வாளால் வெட்டி மிரட்டல் போஸ் கொடுத்த ஹீரோ... போலீஸ் நோட்டீஸ்
பெங்களூரு: பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டி, போஸ் கொடுத்த பிரபல ஹீரோவுக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபகாலமாக வாள், அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டுவது அதிகரித்துவருகிறது. பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களுக்கு முன் இப்படி வாளால் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் அவரை மடக்கிப் பிடித்தது போலீஸ்.
இதைப் பின்பற்றி வாளால் கேக் வெட்டும் சம்பவங்கள் தொடர்கின்றன. அப்படி பர்த் டே கொண்டாடிய புள்ளிங்கோக்களை வாரி அள்ளி வருகிறது போலீஸ்.

பெங்களூரு
இப்போது இந்த ஸ்டைல் பெங்களூருக்குப் பரவியிருக்கிறது. அங்கு இப்படி பர்த் டே கொண்டாடி இருப்பது ஒரு சினிமா ஹீரோ.

சர்ச்சை நாயகன்
பிரபல கன்னட ஹீரோ துனியா விஜய். சர்ச்சைக்கும் இவருக்கும் அவ்வளவு பொருத்தம். ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருப்பார். இப்போது சிக்கியிருப்பது, இந்த சர்ச்சையில்.

பிறந்த நாள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், பெங்களூர் ஹோசரஹள்ளியில் உள்ள தனது வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடினார் துனியா விஜய். பிறந்த நாளுக்காகக் கொண்டு வரப்பட்ட கேக்கை, பெரிய வாளால் வெட்டி கொண்டாடினார்.

போலீஸ் நோட்டீஸ்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது பரபரப்பானதை அடுத்து கிரிநகர் போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் வாளால் கேக் வெட்டியதற்கு விளக்கம் கேட்டு துனியா விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











