சீட்டிங்.. காப்புரிமை மீறல்.. நடிகை கங்கனா மீது பாய்ந்தது வழக்கு.. இப்ப என்ன மேட்டர் தெரியுமா?
மும்பை: புத்தக காப்புரிமை மீறலில் ஈடுபட்டதாக நடிகை கங்கனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
பாலிவுட்டை எதிர்த்தும், சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்களை பதிவிட்டும் பிரச்சனைகளை கிளப்பி உள்ளார்.

மீண்டும் தமிழில்
ஜெயம் ரவியின் தாம் தூம் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் பிஸியான கங்கனா ரனாவத், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர உள்ளார். மே 13ம் தேதி தலைவி படம் ரிலீசாக உள்ள நிலையில், ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கங்கனா ரனாவத்.

சர்ச்சை புயல்
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் விவகாரத்தில் பாலிவுட்டில் மாஃபியாவின் ஆட்சி நடப்பதாகவும், ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களை பகிரங்கமாகவும் குற்றம்சாட்டி கங்கனா ரனாவத் பரபரப்பை கிளப்பினார். மேலும், மகாராஷ்ட்ரா அரசுக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சை ட்வீட்களை பதிவிட்டு சர்ச்சை புயலாக மாறிய கங்கனா மீது ஏகப்பட்ட வழக்குககள் தொடரப்பட்டுள்ளன.

புத்தகம் மொழியாக்கம்
இந்நிலையில், தற்போது இன்னொரு பிரச்சனையில் சிக்கியுள்ளார் கங்கனா ரனாவத். எழுத்தாளர் ஆசிஷ் கவுல் எழுதிய திதா: தி வாரியர் குயின் ஆஃப் காஷ்மீர் புத்தகத்தை இந்தியில் 'காஷ்மீர் கி யோதா ராணி திதா' என்கிற பெயரில் மொழி பெயர்த்ததில் நடிகை கங்கனா ரனாவத் மீது காப்புரிமை மீறல் குற்றச்சாட்டை எழுத்தாளர் ஆசிஷ் கவுல் முன் வைத்துள்ளார்.

சீட்டிங், காப்புரிமை மீறல்
தனது அனுமதி இல்லாமல் நடிகை கங்கனா ரனாவத் அந்த புத்தகத்தை தனது இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டார் என அவர் அளித்த புகாரை விசாரித்த மும்பை நீதிமன்றம், நடிகை கங்கனா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க மும்பையில் உள்ள கார் போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

எத்தனை பிரிவுகள்
நடிகை கங்கனா ரனாவத், அவரது சகோதரி ரங்கோலி சாந்தல், கமல் குமார் மற்றும் அக்ஷத் ரனாவத் உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், பிரிவு எண் 405, 415 (சீட்டிங்). 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைவி படத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் தேஜாஸ் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











