twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘ஆத்தாடி என்ன உடம்பு’.. ஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்!

    தனது பாடலை ஹிப்ஹாப் தமிழா ஆதி பயன்படுத்திவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யன் புகார் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    நட்பே துணை ட்ரைலர் லான்ச்: ஹிப் ஹாப் ஆதி பேச்சு- வீடியோ

    சென்னை: தனது அனுமதி பெறாமல் தனது பாடலை ஹிப்ஹாப் தமிழா ஆதி பயன்படுத்திவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யன் புகார் தெரிவித்துள்ளார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சுந்தர் சி தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் நட்பே துணை. இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஆதி தான்.

    சிந்துநதி பூவே என்ற படத்தில் இடம் பெற்றிருந்த பாடலான 'ஆத்தாடி என்ன உடம்பு' பாடலை, தனது நட்பே துணை படத்தில் பயன்படுத்தி இருந்தார் ஆதி. படத்தின் முதல் பாடலாக இப்பாடல் இடம் பெற்றிருந்தது.

    இந்நிலையில், சிந்துநதி பூவே படத்திற்கு இசையமைத்தவரான சௌந்தர்யன், 'தனது அனுமதி பெறாமலேயே ஹிப்ஹாப் தமிழா ஆதி, அந்த பாடலை நட்பே துணை படத்தில் பயன்படுத்திவிட்டதாக' குற்றஞ்சாட்டியுள்ளார்.

    தாராளமாக தடவலாம், ஆனால் 2 கன்டிஷன்: நெட்டிசனுக்கு கஸ்தூரி நெத்தியடி பதில் தாராளமாக தடவலாம், ஆனால் 2 கன்டிஷன்: நெட்டிசனுக்கு கஸ்தூரி நெத்தியடி பதில்

     சிந்து நதி பூவே

    சிந்து நதி பூவே

    மேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஜென்டில்மேன் படத்தை தயாரித்த கே.டி.குஞ்சிமோன் தான் சிந்துநதி பூவே படத்தை தயாரித்தார். இந்த படம் ஒரு கிராமிய படம். எனவே பாடல்கள் எல்லாமே மண்மணம் வீசும் வகையில் இருக்க வேண்டும் என நினைத்து, நான் இசையமைத்தேன்.

    ஹிட் பாடல்கள்

    ஹிட் பாடல்கள்

    சிந்து நதி பூவே படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட்டானது. குறிப்பாக 'ஆத்தாடி என்ன உடம்பு' பாடல் பட்டிதொட்டி எங்கும் தெறித்தது. படத்தில் ஒரு குத்து பாடல் வேண்டும் என்பதற்காகவே வைரமுத்து வரிகளில் இந்த பாடலை உருவாக்கினோம்.

    காமெடியன் ராமர்

    காமெடியன் ராமர்

    இன்று கூட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த பாடலை பயன்படுத்துகின்றனர். காமெடி நடிகர் ராமர், இந்த பாடலை ஆத்தாடி என்ன உடம்பி என பாடி காமெடி செய்கிறார். இதை வைரமுத்து கேட்டால், எவ்வளவு வருத்தப்படுவாரோ தெரியவில்லை.

    அனுமதி பெறவில்லை

    அனுமதி பெறவில்லை

    நட்பே துணை படத்தில் இந்த பாடலை பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. நான் நினைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்க முடியும். தயாரிப்பாளர் சங்கத்திலோ, இசை கலைஞர்கள் சங்கத்திலோ புகார் செய்து பஞ்சாயத்து செய்ய முடியும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன்.

    பெருமை

    பெருமை

    எனக்கென்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அதை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இப்போது உள்ள இளைஞர்கள் எங்களுடைய பாடல்களை பயன்படுத்திக்கொள்வது எங்களுக்கு பெருமை தான். இருப்பினும் என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் என்பது தான் எனது ஆதங்கம்", என அவர் கூறினார்.

    English summary
    Music Director Soundaryan raises copyrights issue for Hiphop Adhi's Natpe Thunai movie song 'Athadi enna udambu'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X