கொரோனா 2வது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது… பிரபல இயக்குனர் ட்விட்!

கொரோனா 2வது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது... பிரபல இயக்குனர் ட்விட்!

சென்னை : கொரோனா இரண்டாவது அலை பயங்கரமாகவே இருக்கிறது என்று இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், முதல் அலையைவிட இரண்டாவது அலை மிக வேகமாக பரவி தனக்கு நெருக்கமான பல நண்பர்களை காவு வாங்கிவிட்டதாக மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தயாரித்து இயக்கினார்

தயாரித்து இயக்கினார்

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல திறமைகளைக் கொண்டவர் நவீன். இவர் சிம்புதேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வடிவேல் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலும், பசங்க படத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர், மூடர்கூடம் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்.

எதிர்கொள்ள தைரியம் தேவை

எதிர்கொள்ள தைரியம் தேவை

இந்நிலையில் இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக்கிறது. முதல் அலையில் எனக்கு தெரிந்த நண்பர்கள் பலருக்கு கொரோனா வந்து போனது. ஆனால் இரண்டாம் அலை எனக்கு நெருக்கமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. துயரோடு அதிகபடியான அச்சமும் கலந்தே இருக்கிறது. விழிப்புணர்வும் தைரியமும் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

16,665 தொற்று உறுதி

16,665 தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்தை தொட்டுள்ளது.

Recommended Video

New Corona Virus Symptoms | Corona Vaccine | Doctor Boopathy John விளக்கம் | Oneindia Tamil
4764 பேர் பாதிப்பு

4764 பேர் பாதிப்பு

சென்னையில் கொரோனாவால் 4,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் தவிர்த்து கர்நாடாகாவில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X