கையைக் கழுவிட்டுதான் எல்லாம்.. யோகிபாபுவுக்கு கற்றுக் கொடுத்த நிரோஷா!

சென்னை : நடிகை நிரோஷா, யோகிபாபுவுடன் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து இருக்கிறார் .

இந்தியாவில் தற்போது கொரோனா பரவி வருவதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல விசயங்களை செய்து வருகிறது. மக்களுக்கு கொரோனா பற்றிய பயம் அதிகரித்து இருக்கிறது. இதனால் அரசு தரப்பில் கொரோனா வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற விளம்பரத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள் .

Corona Awareness Advertisement

Recommended Video

Yogi Babu Marriage Video | Yogi Babu | Yogi Babu- Manju Parkavi

இந்த விளம்பரத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை ஒரு கதையுள்ள காட்சி வடிவத்தில் விளம்பரமாக்கி இருக்கிறார்கள். அதன் இறுதியில் நடிகர் ராம்கியும் கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் உதவி பற்றியும் பேசுகிறார். இந்த விளம்பரத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் நிரோஷா முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

நடிகை நிரோஷா இலங்கையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஜொலித்த பிரபலங்களில் ஒருவர். இவர் 1988ல் வெளிவந்த அக்னி நட்சத்திரம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தமிழ் ,தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து அசத்தியவர்.

Corona Awareness Advertisement

நிரோஷா ஒரு இடத்திற்கு மேல் நல்ல குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இதன் பின் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதையும் பயன்படுத்தி தற்போது வரை நாடகங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் மதியம் 1.30க்கு ஒளிப்பரப்பாகி வரும் மின்னலே எனும் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Corona Awareness Advertisement

யோகிபாபு ஒரு முக்கிய பிரபலமாக வளர்ந்து விட்டார் அவரின் மூலம் இந்த விளம்பரம் எடுக்கபட்டுள்ளதால் பல மக்களை சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நிரோஷா மற்றும் அவர் கணவர் நடிகர் ராம்கியும் இணைந்து நடித்திருப்பது கூடுதல் சிறப்பு இதனால் இந்த விளம்பரம் சரியான அளவில் மக்களை சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X