மனோபாலா கொடுத்த ஐடியா ....பிளாக் பாண்டி போட்ட கொரோனா விழிப்புணர்வு பாடல்!
சென்னை : மனோபாலாவும் பிளாக் பாண்டியும் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி உள்ளனர்.
Recommended Video
கொரோனா தொற்று பெரிய அளவில் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. ஆனால் சில இளைஞர்கள் இதை மதிக்காமல் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து மீறி வருகின்றனர்.

இதற்காக இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலாவும் நகைச்சுவை நடிகர் பிளாக்பாண்டியும் இணைந்து ஒரு விழிப்புணர்வு பாடலை உருவாக்கி உள்ளனர்
இந்த காணொளியை முழுக்க முழுக்க ஒரு பாடலாக தயாரிக்காமல் ஆரம்பத்தில் ஒரு சிறிய விழிப்புணர்வு குறும்படத்தையும் இணைத்துள்ளனர் . அதில் பிளாக் பாண்டி மளிகை பொருட்கள் வாங்க போகிறேன் என்று பொய் கூறி ஊரை ஏமாத்தி நண்பர்களுடன் ஊர் சுற்ற நினைக்கும் இளைஞனாகவும் அவனுக்கு அறிவுரை கூறும் பக்கத்து வீட்டுகாரராக மனோபாலாவும் நடித்து உள்ளனர்.
இதில் பிளாக் பாண்டி இன்றைய இளைஞர்களின் அலட்சிய போக்கை பிரதிபலிக்கும் ஒரு இளைஞராக நடித்திருக்கிறார். மனோபாலா தேவை இன்றி ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். உன் திறமையை இந்த 21 நாட்களில் வெளிகொண்டு வரலாமே என்று மனோபாலா பாண்டியிடம் கேட்க இங்கிருந்து உண்மையை உணரும் பாண்டி தன் நேரத்தை தனக்கு பிடித்த படி வீட்டிலே செலவிடுகிறேன் என்று கூறி தனது பாடலை பாட துவங்குகிறார் .

இந்த பாடலில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் அறிவுறுத்தியதை போல வீட்டிலே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாடியிருக்கிறார். மேலும் இந்த பாடலின் மூலம் அடிப்படையாக நாம் தனிமைபடுத்தலை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என ஆணித்தனமாக கூறியுள்ளார்.

இந்த பாடலுக்கு வரிகள் எழுதி, இசையமைத்து, பாடலை தானே பாடியும் இருக்கிறார் நகைச்சுவை நடிகரான பிளாக் பாண்டி. இவருக்கு இப்படியொரு திறமை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள் .
பாண்டி இந்த லாக்டவுனில் தனது திறமையை வெளிகொண்டு வந்ததை போல நீங்களும் வெளிகொண்டு வாருங்கள் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் வீட்டில் இருப்பது மிகவும் அவசியமாகும் இதை அனைவரும் உணர்ந்து வீட்டில் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











