கேலி..கிண்டலுடன்..சென்னை28 டீம்..கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

சென்னை : கொரோனாவை தடுக்கும் விதமாக பல ஜாம்பவான் நடிகர்கள் வீட்டில் இருந்த படியே ஒரு விழிப்புணர்வு வீடியோ எடுப்பது நாம் அனைவரும் அறிந்ததே . அமிதாப், சீரஞ்சீவி, ரஜினி என்று பட்டய கிளப்பிய வருகின்றனர். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு சின்ன வீடியோவை இயக்கி வெளியிட்டுள்ளார். தனது வீட்டில் இருந்தபடியே சென்னை28 படத்தின் நடித்த அனைவரையும் அவர்கள் வீட்டில் இருந்தபடியே நடிக்கவைத்து அந்த வீடியோவை உருவாக்கி உள்ளார்.

கிரிக்கெட் பேட், பால் என்று வீட்டில் இருந்தபடியே கிரிக்கெட் விளையாடி சமூக கருத்தை பக்காவாக ஜாலியாக சொல்லி உள்ளார். சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும், சானிடைசர் பயன்படுத்தவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை அவர்கள் பாணியில் எப்போதும் போல நய்யாண்டி கலந்து சொல்லி உள்ளார்கள்.

Corona Awareness Video released by Chennai28 Team

மிர்ச்சி சிவா வழக்கம் போல தனது பாணியில் காமெடி செய்துள்ளார், அரவிந்த் , வைபவ் , விஜயலக்ஷ்மி , பிரேம்ஜி , விஜய்வசந்த் என்று சென்னை28 குழு ஒட்டு மொத்தமாக இந்த வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளனர். நம்ம ஜெய் மட்டும் தான் மிஸ்ஸிங்.

Corona Awareness Video released by Chennai28 Team

லாக்டவுனில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை விமர்சிப்பது போன்று அவர்கள் சில காமெடி செய்துள்ளனர். காமெடியான மக்கள் செய்கைகளை கேலியாக கொஞ்சம் பேசி சிந்திக்கவும் வைக்கின்றனர். கைதட்டுகிறேன் என கூறி பட்டாசு வெடித்து ஆட்டம் போட்டவர்கள், விளக்கேற்ற சொன்னதற்கு உடல் முழுவதும் விளக்கேற்றி சுற்றியவர்கள், போலீசிடம் அடி வாங்கிய இளைஞர்கள் என பலரையும் இந்த வீடியோவில் கிண்டல் செய்துள்ளனர் .

Corona Awareness Video released by Chennai28 Team

Recommended Video

DD Love for Money heist | DD Italian Song

டெக்னாலஜி மிகவும் வளர்ந்து விட்ட காரணத்தினால் அவரவர் வீட்டில் இருந்த படியே இந்த வீடியோ செய்தது பாராட்டுக்குரியது. கோ கொரோனா, கோ கொரோனா என்று இந்த வீடியோ கடைசியில் வரும் பொழுது வெங்கட் பிரபு டீமின் ஒட்டு மொத்த லூட்டி தாங்க முடியவில்லை. விரைவில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வீடியோ பதிவு செய்யப்போவதாக பேச்சு வந்து கொண்டு இருக்கிறது. கொரோனா சம்பந்த பட்ட ஒரு குறும்படமா அல்லது ஒரு சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய விளம்பர படமா என்பது மே 3ஆம் தேதிக்கு பிறகு தான் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X