கொரோனாவால் சமையல்காரரான நடிகை.. 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில் தடம் மாறிய வாழ்க்கை!

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய நடிகை சமையல்காரராக மாறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறையும் பெரும் சரிவை சந்தித்துள்ளது. சினிமா உணவகம் என பல தொழில்களும் பாதிப்பை சந்தித்துள்ளன.

புரட்டிப்போட்ட கொரோனா

புரட்டிப்போட்ட கொரோனா

கொரோனா பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் காய்கறி விற்பது, மீன் விற்பது, மாடு வளர்ப்பது, கார் ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது என தங்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்கி வருமானத்திற்கு வழி தேடி வருகின்றனர்.

வாழ்க்கை சக்கரம்

வாழ்க்கை சக்கரம்

அந்த வகையில் கொரோனா அச்சுறுத்தலால் பிரபல நடிகை ஒருவர் சமையல்காரர் ஆகியுள்ளார். அதாவது 1990களில் பிரபலமாக இருந்தவர் நடிகை பிருந்தா. இவர் பிரபல நடன கலைஞரான எம்ஆர் நிர்மலாவின் மகள் ஆவார். மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான வாழ்க்கைச் சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சீரியல்களில்..

சீரியல்களில்..

புதிய முகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிருந்தா, சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகை பிருந்தா. பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் சீரியல் பக்கம் தலைக்காட்டினார் நடிகை பிருந்தா.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

சன் டிவி ஆரம்பித்த காலத்தில் ஒளிபரப்பான அலையோசை, அவளுக்கென்று ஓர் இடம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் 1997ல் கணவருடன் மலேசியாவுக்கு சென்றார் பிருந்தா. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் பிருந்தா.

சமையல்காரரான நடிகை

சமையல்காரரான நடிகை

சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை திரும்பியுள்ள பிருந்தா, மலேசியாவின் ஸ்பெஷல் உணவான நாசி லி மாக் என்ற உணவை தானே தயாரித்து சினிமா பிரபலங்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் பல மலேசிய உணவுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் பிருந்தா.

Recommended Video

Ajith, Vishal யாரும் உதவி பண்ணல | Angadi Theru Sindhu குமுறல்
மீண்டும் சீரியல்கள்

மீண்டும் சீரியல்கள்

நடிகை பிருந்தாவிடம், தற்போது முன்னணி தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரைவிலேயே அவர் மீண்டும் தொலைக்காட்சி சீரியல்களில் முகம் காட்டுவார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X