கொரோனா பீதி.. களையிழந்த ஹோலி பண்டிகை.. தைரியமா யார், யார் கொண்டாடி இருக்காங்க தெரியுமா?
மும்பை: வண்ணப் பொடிகளை தூவி, அன்பை பறிமாறிக் கொள்ளும் ஹோலி பண்டிகை இந்தியாவில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2020ம் ஆண்டு ஹோலி பண்டிகை, கொரோனா பீதியால் களை இழந்து காணப்படுகிறது. சில பிரபலங்கள் மட்டுமே தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராய், ஜூனியர் என்.டி.ஆர்., ரிஷி கபூர், அனுபம் கெர், புமி பெட்னேகர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் ஹோலி பண்டிகை குறித்து பதிவிட்டுள்ள பதிவுகளை இங்கே காண்போம்.
மகளுடன் ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் படத்தில் இரு வேடங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது மகள் ஆரத்யாவுடன் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். போகி பண்டிகையை போல, ஹோலி பண்டிகையின் போதும், தீ மூட்டி பழைய குப்பைகளை எரிப்பது வழக்கம், ஐஸ்வர்யா ராய், அதிகாலையில் கொண்டாடிய ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ்
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், தனது சிறு வயதில் ஹோலி கொண்டாட்டத்தின் போது, எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அனைவரும், பாதுகாப்பாக ஹோலி கொண்டாடுங்கள்.. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மிகவும் ஜாக்கிரதையாக இந்த ஹோலி பண்டிகையை கொண்டாடுங்க என ட்வீட் போட்டுள்ளார்.
புமி பெட்னேகர்
பாலிவுட் நடிகை புமி பெட்னேகர், ஹோலி பண்டிகையை வேற லெவலில் கொண்டாடி உள்ளார். இவர் தானா புமி பெட்னேகர் என்பதே தெரியாத அளவுக்கு, கலர் பொடிகளால், தனது முகத்தை மறைத்து, நல்லா என்ஜாய் பண்ணி ஹோலி கொண்டாடியுள்ளார். புமி பெட்னேகரின் இந்த இன்ஸ்டா வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா சோப்ரா
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸ் உடன், கடந்த மார்ச் 7ம் தேதியே கலர்ஃபுல்லாக ஹோலி கொண்டாடி இருந்தார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு இருந்தது. மேலும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு, கணவருடன் பிரியங்கா ‘பாங்கு' குடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜூனியர் என்.டி.ஆர்
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரண் உடன் இணைந்து நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்துடன், ஹோலி கொண்டாடி உள்ள புகைப்படத்தில் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Recommended Video
காஜல் அகர்வால்
கொரோனா வைரஸ் எதிரொலியால் பல சினிமா பிரபலங்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளனர். சில பிரபலங்கள் மட்டுமே, தங்கள் குடும்பத்தினருடன் மட்டுமே ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், பாதுகாப்பாக ஹோலி பண்டிகையை கொண்டாடுங்கள் என ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











