twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நிவாரணம் ரூ5 லட்சம்… ஸ்டாலினிடம் வழங்கினார் பாரதிராஜா !

    |

    சென்னை : தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இயக்குனர் பாரதிராஜா ரூ 5 லட்சத்திற்காக காசோலையை வழங்கினார்.

    முதலமைச்சரை தலைமை செயலகத்தில் நேரடியாக சந்தித்து இந்த காசோலையை பாராதிராஜா கொடுத்துள்ளார்.

    மீண்டும் பரவிய கொரோனா வைரஸ்.. அதிரடியாக நிறுத்தப்பட்ட டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பு!மீண்டும் பரவிய கொரோனா வைரஸ்.. அதிரடியாக நிறுத்தப்பட்ட டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பு!

    இந்த புகைப்படத்தை தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    ஊரடங்கு

    ஊரடங்கு

    கொரோனா 2வது அலை மிக தீவிரமாகி இருக்கிறது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, சில தினங்களாக சற்று குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமான நிதி உதவிகளை வழங்கிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் வாங்க இந்த நிதி பேருதவியாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

    தாராள உதவி

    தாராள உதவி

    இதையடுத்து திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். பலரும் அளித்த தாராளமான உதவியால் முன்களப்பணியாளர்களுக்கு உதவி, கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தற்போது தட்டுப்பாடு இன்றி உள்ளது.

    ரூ 5 லட்சம் காசோலை

    ரூ 5 லட்சம் காசோலை

    இந்நிலையில், இயக்குனர் பாரதி ராஜா கொரோனா நிவாரண நிதியாக ரூ 5 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    Read more about: bharathiraja
    English summary
    Corona fund of rs 5 lakhs Bharathiraja presents it to Stalin
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X