கொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு!
மும்பை: உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்படும் மக்களுக்காக ஹாலிவுட் நடிகர்கள் இணைந்து கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகின்றனர்.
Recommended Video
வீட்டில் இருந்தபடியே One World என என்ற பெயரில் நடைபெறவுள்ள லைவ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ள உள்ளனர்.

பிரபல ஹாலிவுட் பாடகியான லேடி காகா உள்ளிட்ட சில ஹாலிவுட் பிரபலங்கள் இந்த லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் வரும் தொகையை WHOவின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில், இந்தியளவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன் லால், மம்மூட்டி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வீட்டிலேயே எடுக்கப்பட்ட குறும்படம் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா வீட்டில் இருந்தபடியே இந்த லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான், தனது ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக கொரோனா நிவாரண நிதியை வழங்கி உள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவும் PM Careக்கு நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











