கொரோனாவை விட கொரோனா வதந்தி பயங்கரமானது.. பிகே என்ன சொல்றாரு கேளுங்க!
சென்னை: கொரோனா வைரஸ் குறித்து பிகே வெளியிட்டுள்ள வீடியோ ஒன் இந்தியா தமிழில் வைரலாகி வருகிறது.
Recommended Video
சினிமா பற்றிய டாப் 5 பீட்ஸ் சொல்லும் பிகே என்னடா? திடீரென கொரோனா குறித்து இப்படி பேசுகிறாரே என ரசிகர்கள் அவரது வீடியோவை ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.

கொரோனா வைரஸை விட மிகவும் பயங்கரமானது அது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் தான் என்றும், பொதுமக்கள், வதந்திகளுக்கு செவி சாய்த்து வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அரசு மற்றும் மருத்துவர்கள் சொல்லும் முறைப்படி பாதுகாப்புடன் நடந்து கொண்டால் கொரோனாவாவது, மரணமாவது என தன்னுடைய ஸ்டைலில் பிகே இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மேலும், கோழி கறி தின்றால் கொரோனா பரவும் என்ற வதந்தியை கிளப்பி விட்டு, கோழி கறி நடத்தி வந்த பலரது வாழ்க்கையை கேள்விக் குறி ஆக்கி உள்ளனர் என்றும், முட்டையை தின்றால் கொரோனா வரும் என பயமுறுத்தி முட்டை விலையை குறைத்துள்ளனர் என்றும், அதையெல்லாம் நம்பாதீங்க, எல்லாமே புருடா என பிகே தெளிவுபடுத்தியுள்ளார்.
உலகளவில் பல பிரபலங்கள் கொரொனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தப்பிக்க பல உதவிகளை செய்து வருவதாகவும், சினிமா துறை முற்றிலும் முடங்கி நஷ்டத்தை சந்தித்து வருவது உள்ளிட்ட பல விஷயங்களை பிகே பேசியுள்ளார். அவரது ஸ்டைலில் கொரோனா குறித்து வெளியாகி உள்ள பிரத்யேக வீடியோவை லிங்கை கிளிக் செய்து நீங்களும் கண்டு மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications











