twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா உதவி.. களத்தில் இறங்கிய தளபதி ரசிகர்கள்.. தினக் கூலிகளின் பட்டினியை போக்க மாஸ் நடவடிக்கை!

    |

    சென்னை: கொரோனா பாதிப்புக்காக, நடிகர் விஜய் ஏதும் வாய் திறக்கவில்லையே என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், சத்தமில்லாமல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.

    Recommended Video

    Vijay fans donates 150 rice bags to the daily wage workers

    மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுக்கும் கோலிவுட் நடிகர்களில், நடிகர் விஜய்யின் பங்கு அளப்பறியது.

    Corona help: Thalapathians donate 150 rice bags!

    விஜய்யின் மக்கள் மன்ற நிர்வாகிகள் கொரோனா பாதிப்பால், பசியால் வாடும் கூலித் தொழிலாளிகளுக்காக 150 மூட்டை அரிசி வழங்கி உள்ளனர்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்தியாவில் வெறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் கடந்த வாரம் வரை இருந்த நிலையில், தற்போது, 1205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

    கொரோனாவை எதிர்க்க நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டு இருந்தாலும், பலரும் அதை பின்பற்றாமல் வெளியே சுற்றித் திரிந்து கொரோனா வைரஸை பரப்பி வருகின்றனர்.

    வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று மாட்டிக் கொண்ட பலர், நடை பயணமாக சொந்த ஊருக்கு பயணப்படும் சோகங்களையும் காண முடிகிறது.

    கொரோனாவுக்கு எதிராக போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு பல பிரபலங்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அதிகபட்சமாக நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி நிதியளிக்க முன் வந்துள்ளார்.

    Corona help: Thalapathians donate 150 rice bags!

    இந்நிலையில், நடிகர் விஜய்யின் மக்கள் மன்ற நிர்வாகிகள், பல மாவட்டங்களில் முக கவசங்களை இலவசமாக வழங்குதல், தினக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் பசியை ஆற்ற தலா 25 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கி உள்ளனர்.

    Corona help: Thalapathians donate 150 rice bags!

    மேலும், கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு, தங்களால் முயன்ற பல்வேறு உதவிகளையும் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார்.

    English summary
    Vijay fans donates 150 rice bags to the daily wage workers, who suffered in the corona virus lock down period.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X