For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'எல்லாரும் பாதுகாப்பா இருங்க, அது செயின் மாதிரி...' ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டார் நடிகை மஞ்சு வாரியர்!

    By
    |

    கொச்சி: மருத்துவர்களின் அறிவுரைப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா விழிப்புணர்வு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டார் நடிகை மஞ்சு வாரியர்! - வீடியோ

    மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

    அசுரன் நாயகி

    அசுரன் நாயகி

    15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை அசுரன் மூலம் நிறைவேறியது. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

    த பிரீஸ்ட்

    த பிரீஸ்ட்

    இதற்கிடையே அவர் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக, த பிரீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டியுடன் அவர் நடிக்கும் முதல் படம் இது. 'அவருடன் நடிக்க வேண்டும் என்பது பல வருட கனவு. இப்போது நனவாகி உள்ளது' என்றும் மஞ்சு கூறியிருந்தார். அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோ இயக்கும் கிரைம் திரில்லர் படமான இதை அன்டோ ஜோசப், உன்னிகிருஷ்ணன், வி.என்.பாபு தயாரிக்கின்றனர்.

    ஷூட்டிங்

    ஷூட்டிங்

    இதன் ஷூட்டிங் கேரளாவில் தொடங்கியபோது, நடிகர் மம்மூட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மஞ்சுவாரியர், அதை முகப் புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், கனவு நனவாகிறது. நன்றி மம்மூக்கா என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இதன் ஷூட்டிங் கொச்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வேகமாக நடந்து வந்தது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    கேரளாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கு வரும் 31 ஆம் தேதி முதல் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளனர். இதனால் சில படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புகளையும் தள்ளி வைத்துள்ளனர். மம்மூட்டி, மஞ்சுவாரியர் நடிக்கும் த பிரீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கையும் தள்ளி வைத்துள்ளனர்.

    கொரோனா கட்டுக்குள் வந்த பிறகே இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

    பிரியங்கா சோப்ரா

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று நடிகர், நடிகைகள் கூறி வருகின்றனர். பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா, எல்லோரும் வணக்கத்திற்கு மாறுங்கள், பழைய முறை என்றாலும் இது உலக மக்கள் அனைவரையும் பாதுக்காக சிறந்த வழி' என்று கைகூப்பி வணங்கும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

    விழிப்புணர்வு வீடியோ

    விழிப்புணர்வு வீடியோ

    இதையடுத்து நடிகை மஞ்சு வாரியரும் கொரோனா பரவுவதை தடுக்க, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் செயின் மாதிரி பரவும் தொற்று. மருத்துவர்களின் அறிவுரைப்படி, கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக பாதுகாப்பாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Corona is like a chain...Manju Warrier comes up with video
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X