குட்டி ஸ்டோரியில் கொரோனா.. வைரஸ் திரைப்படங்கள்.. விளாவரியா பேசும் டாக்கிங் 2 மச்!

சென்னை: தமிழ் பிலிமி பீட்டின் புதிய படைப்பாக டாக்கிங் 2 மச் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதன் இரண்டாம் எபிசோட் தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

கொரோனாவை முன்பே கணித்த தமிழ் படம் | TALKING 2 MUCH EP-2 | FILMIBEAT TAMIL

உலகமே கொரோனா கொரோனா என பேசி வருவதால், இவர்களும், கொரோனா டாபிக்கையே இரண்டாவது எபிசோடில் பேசியுள்ளனர்.

Corona movies and gossips, Talking 2 Much episode 2 is here!

வாட்ஸப்பில் பரவும் அர்த்தமற்ற கொரோனா வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், என்ன என்ன வதந்திகள் பரவுகிறது. அதை ஏன் நம்பக் கூடாது என்பது பற்றி தெளிவாக பேசியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்து முன்பே கணித்த பிரபல ஹாலிவுட் படமான Contagion படத்தை நெட்பிளிக்ஸில் பலரும் பார்த்து வருவதாகவும், வைரஸ் படங்களை இணையத்தில் தேடி தேடி ரசிகர்கள் இந்த லாக் டவுன் நேரத்தில் கண்டு ரசிப்பதாகவும் கூறியுள்ளனர்.

தமிழில் வெளியான சூர்யாவின் 7ஆம் அறிவு, கமல்ஹாசனின் தசாவதாரம், பாலாஜி மோகனின் வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல படங்கள் வைரஸ் கிருமி பற்றி பேசியுள்ளதால், அந்த படங்களை அதிகம் தேடி தமிழ் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

மேலும், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோவில், கொரோனா என்ற வார்த்தையும் இடம் பெற்றிருப்பதையும் கண்டறிந்து டாக்கிங் 2 மச்சில் பேசியுள்ளனர்.

கடந்த எபிசோடில் பார்த்திபன் பற்றிய கிளுகிளுப்பான செய்தி வெளியான நிலையில், இந்த எபிசோடில், கடலில் கட்டுமரம் படத்தின் கர்ண கொடுரமான கிளுகிளுப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நீங்களே அதை பார்த்து என்ஜாய் பண்ணுங்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X