திட்டத்தை மாற்றிய லாக்டவுன்.. லண்டன் காதலருடன் நடக்க இருந்த நடிகையின் பிரமாண்ட திருமணம் ரத்து!

By

பெங்களூர்: கொரோனா வைரஸ் காரணமாக, மேலும் ஒரு நடிகையின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகை காம்னா சிங். கோலரா, ராஜா சிம்ஹா, 8 எம்.எம், உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவரும் லண்டனில் வசிக்கும் திலன் என்பவரும் காதலித்து வந்தனர்.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தையடுத்து திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் கலந்துகொண்டனர். பிறகு இங்கிலாந்து விசாவுக்காக விண்ணப்பித்திருந்தார், காம்னா சிங். இந்த விசா நடைமுறைகளுக்காகப் பதிவு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தை இந்த மாதம் நடத்த முடிவு செய்திருந்தார்கள்.

உயிர்க்கொள்ளி வைரஸ்

உயிர்க்கொள்ளி வைரஸ்

அதற்குள் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவிட்டது. சீனாவில் உருவான இந்த கொரோனா, பல்வேறு நாடுகளைப் பதம் பார்த்து வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உயிரிழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இந்த உயிர்க் கொள்ளி வைரஸை கட்டுப்படுத்த, உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ஊரடங்கு

ஊரடங்கு

இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு பிறப்பித்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. மருத்துவர்களும் சுகாதரத்துறையினரும் இதற்கு எதிராக, கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை காம்னா சிங்கின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

இதுபற்றி நடிகை காம்னா சிங் கூறும்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரலில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தோம். இதற்காக அவர் குடும்பத்தினர் இந்தியா வர இருந்தனர். ஆனால், லாக்டவுன், எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் இங்கு வரமுடியவில்லை. திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருங்கால கணவருடன் தினமும் போனில் பேசிக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

கொரோனா காரணமாக பல, நடிகர், நடிகைகளின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. சில சினிமா பிரபலங்களின் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடந்துள்ளது. மலையாள நடிகை உத்ரா உண்ணியின் திருமணம், எளிமையாக நடந்தது. தெலுங்கு நடிகர் நிதின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். கன்னட நடிகரும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி திருமணம் எளிமையாக நடந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X