twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாஸ்லியாவுக்கு இந்த நேரத்தில் இப்படியொரு சோதனை நடக்கக் கூடாது.. அப்பாவின் சடலத்தை பார்க்க முடியுமா?

    |

    சென்னை: கனடாவில் இருந்து மரியநேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. லாஸ்லியாவால் மறைந்த தனது அப்பாவின் முகத்தை கடைசியாக பார்க்க முடியுமா? என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

    Recommended Video

    உங்கள் நினைவுகள் என்றும்..Abhirami Exclusive | Miss You Mariyanesan Appa

    லாஸ்லியாவின் அப்பாவின் திடீர் மரணம், அவரை ரொம்பவே நிலை குலைய செய்துள்ளது.

    அதை விட கொரோனா காலம் என்பதால், இலங்கைக்கு சென்றாலும், 14 நாட்கள் குவாரண்டின் செய்யப்படுவார் என்கிற பகீர் தகவல் மிகப்பெரிய சோதனையாக மாறி உள்ளது.

    10 ஆண்டுகள் பார்க்கல

    10 ஆண்டுகள் பார்க்கல

    இலங்கை செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர், தமிழ் சினிமாவின் அறிமுக நாயகி என ஏகப்பட்ட அறிமுகங்கள் லாஸ்லியாவுக்கு இருந்தாலும், இந்த உலகில் அவரை அறிமுகப்படுத்திய அவரது அப்பாவின் இறுதி அஞ்சலி நடப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருவரும் வேலை காரணமாக 10 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா கொடூரம்

    கொரோனா கொடூரம்

    இந்த உலகத்தில் தனது கொடூரங்களை அரங்கேற்ற கொரோனா ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. லட்சக் கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொரோனா, லாஸ்லியாவின் வாழ்க்கையிலும் தற்போது கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கனடாவில் இருந்து மரியநேசன் உடலை கொண்டு வருவதிலும், லாஸ்லியா இலங்கைக்கு செல்வதற்கும் கொரோனா முட்டுக்கட்டையாக மாறி உள்ளது.

    இலங்கையில் இறுதி அஞ்சலி

    இலங்கையில் இறுதி அஞ்சலி

    கனடாவில் பணிபுரிந்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக முதற் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது பூத உடலை இலங்கைக்கு கொண்டு வரும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடு பட்டு வருகின்றனர். இலங்கையில் தான் அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பம்.

    இலங்கைக்கு சென்றாலும்

    இலங்கைக்கு சென்றாலும்

    நடிகை லாஸ்லியா இலங்கைக்கு செல்ல விஜய் டிவி உதவி வருகிறது. இலங்கைக்கு விரைந்து செல்லும் ஏற்பாடுகளை லாஸ்லியா செய்து வருவதாக, வனிதா விஜயகுமாரும் தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கைக்கு அவர் சென்றாலும், அப்பாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது.

    14 நாட்கள் ஆகும்

    14 நாட்கள் ஆகும்

    இலங்கைக்கு சீக்கிரமே விரைந்தாலும், கொரோனா காலம் என்பதால், 14 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்ட பின்னர் தான் லாஸ்லியாவால் அவரது வீட்டுக்கு செல்ல முடியும் என்கிற சூழல் உள்ளதாக லாஸ்லியாவுக்கு வேண்டப்பட்டவர் தகவல் தெரிவித்துள்ளார். அதனால், அப்பாவின் இறுதி அஞ்சலியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா? ஸ்பெஷல் பர்மிஷன் ஏதாவது கிடைக்குமா? என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளார் லாஸ்லியா.

    English summary
    Vijay Tv helps Losliya to go to Srilanka to attend her father funeral. But Corona virus quarantine will make huge trouble to her. She will met her family after 14 days of quarantine only.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X