கொரோனா வைரஸ் பாதிப்பு.. அள்ளி கொடுத்த தெலுங்கு திரை பிரபலங்கள்!

ஹைதராபாத்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் மக்களுக்காக நிதி வழங்கி உள்ளனர்.

Recommended Video

Allu Arjun Huge Contribution | FEFSI Workers

உலகையே அச்சுறுத்தி மக்களை வீடுகளில் முடக்கியது கொரோனா வைரஸ், அதன் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள 150 மேற்பட்ட நாடுகளில் இதே நிலைமை தான் தற்போது இந்தியாவும் அனுபவித்து வருகிறது.

Corona relief fund

கடந்த இரு வாரமாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது தற்போது வரை 19 பேருக்கு மேல் இறந்துள்ளனர், சுமார் 700 க்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா அரசு வைரஸ்யை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு பக்கபலமாக இருக்கும் வகையில் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அரசாங்கத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக நிதி உதவி வழங்கியுள்ளனர்.

Corona relief fund

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தன் பங்கிற்கு ரூபாய் இரண்டு கோடியை வழங்கினார், மேலும் அவரது அண்ணா மெகா ஸ்டார் சீரஞ்சிவி தன் பங்கிற்கு ஒரு கோடி ரூபாயை நன்கோடையாக வழங்கி உள்ளனர்.

Corona relief fund

இதற்கு அடுத்தபடியாக மகேஷ் பாபு ஒரு கோடி ரூபாய், சீரஞ்சிவியின் மகன் ராம் சரன் 70 லட்சம், ஜீனியர் என் டி ஆர் 75 லட்சம் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் என பலரும் தங்களால் முடிந்ததை வழங்கியுள்ளனர். இவர்கள் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலாக ரிபல் ஸ்டார் பிரபாஸ் நான்கு கோடி ரூபாயை கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக வழங்கியுள்ளார்.

இவற்றில் பாதி தெலுங்கானா மாநிலத்திற்கும் பாதி ஆந்திரா மாநிலத்திற்கும் மற்றும் பிரதமர் கீழ் செயல்படும் துறைக்கும் அனுப்பப்படுகிறது என அவர்கள் அறிவித்துள்ளனர்.

Corona relief fund

பலரும் இந்த முயற்சியை பாராட்டியுள்ளனர், நடிகர் ராம் சரண் பவன் கல்யாண் அவர்களின் டுவிட்டை பார்த்து வியந்து நானும் என் பங்கிற்கு கொடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X