கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன்.. போட்டோவுடன் ட்வீட் போட்ட ராஜமாதா ரம்யா கிருஷ்ணன்!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

அதே சமயத்தில் கொரோனா தடுப்பூசியையும் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வரும் ஏப்ரல் 1 முதல் 45 வயதை கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும், தங்களின் நலன் காக்கும் நோக்கிலும் பல சினிமா பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











