கொரோனாவை விட இவங்க அக்கப்போர் தாங்கல.. டாய்லெட் பேப்பரை வச்சு.. என்ன அழகா வித்தை காட்டுறாரு எமி!

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் செல்ஃப் குவாரண்டின் செய்து கொண்டு இருக்கும் நடிகை எமி ஜாக்சன், டாய்லெட் பேப்பரை கொண்டு செய்யும் வொர்க்கவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Shriya Saran Quarantine Period | Namitha & Athulya Awarness

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமான எமி ஜாக்சன், தெறி, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தனது காதலருடன் குழந்தை பெற்றுக் கொண்டுள்ள நடிகை எமி ஜாக்சன், சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லி உள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

சீனாவில் தொடங்கி, உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொடிய வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 258 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் இந்த கொடிய வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

சுய ஊரடங்கு

சுய ஊரடங்கு

செல்ஃப் குவாரண்டின் எனப்படும் தனிமைப்படுத்துதலை வலியுறுத்தும் விதமாக நாளை ஒரு நாள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி, சுய ஊரடங்கை அமல்படுத்த கோரியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும், பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் கொரோனா வைரஸ் குறித்தும், செல்ஃப் குவாரண்டின் குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

வித்தை காட்டும் எமி

சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல நடிகைகளும், யோகா செய்யும் வீடியோக்களையும், வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன், தனது குழந்தை அருகே வைத்துக் கொண்டு வெறும் டாய்லெட் பேப்பர்களை கொண்டு வித்தியாச வித்தியாசமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

செம கிளாமர்

செம கிளாமர்

மேலும், அந்த வீடியோவில் நடிகை எமி ஜாக்சனின் முன்னழகு எடுப்பாக தெரியும்படி, செம கிளாமராக டைட்டான ஜிம் டிரெஸ்ஸை அணிந்தபடி வொர்க்கவுட் செய்துள்ளார். எமி ஜாக்சனின் இந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குறைந்த நேரத்தில் பார்வையிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மீண்டும் சினிமாவுக்கு

மீண்டும் சினிமாவுக்கு

எமி ஜாக்சனின் குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்க திட்டமிட்ட அவர், தனது ஹாட் புகைப்படங்களை ஒவ்வொன்றாக இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கி உள்ளதால், எமி ஜாக்சனின் ரீ-என்ட்ரி கனவும் சுக்கு நூறாக நொறுங்கிப் போய் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X