கொரோனா அச்சம்.. மயான அமைதியில் லண்டன் விமான நிலையம்.. பயண அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே!
மும்பை: பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, இந்தியாவில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் சென்ற பயண அனுபவங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும், நெட்பிளிக்ஸ் தொடர்களில் ராதிகா ஆப்தே தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.

குறைந்த விமான சேவை
உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிபடைத்து வருகிறது. வரும் மார்ச் 22ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து நடிகை ராதிகா ஆப்தே லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக விமான சேவைகள் கணிசமாக குறைந்துள்ளன.

கூட்டமே இல்லை
லண்டனில் இருந்து சமீபத்தில். ராதிகா ஆப்தே இந்தியா வந்த போது அந்த விமானம் முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிந்த நிலையில், தற்போது, கூட்டமே இல்லாமல், காலியாக விமானம் வந்ததையும், லண்டன் இமிகிரேஷனில் நடந்த விஷயங்கள் குறித்தும் நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி
தனக்கு, என்ன ஆனது? எப்படி இருக்கீங்க? பத்திரமாக இருங்கள் என தொடர்ந்து கேட்டுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி, தான் பரிபூரண நலத்துடன் இருக்கிறேன் என லண்டன் சென்ற நடிகை ராதிகா ஆப்தே பதிலளித்துள்ளார். மேலும், தேவையற்ற பயணங்களை அனைவரும் தவிர்க்க வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார்.

அடிக்கடி லண்டன் செல்வது ஏன்?
லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனிடிக்ட் டெய்லரை நடிகை ராதிகா ஆப்தே திருமணம் செய்து கொண்டதால், அடிக்கடி, இந்தியாவுக்கும் லண்டனுக்கும் ராதிகா ஆப்தே பறந்து வருகிறார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஷூட்டிங் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், லண்டனுக்கு சென்று பத்திரமாக குடும்பத்துடன் இருக்க திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











