இது பயம் அல்ல பொறுப்பு.. தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்.. என்ன காரணம்?

சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் இருந்து இந்தியா வந்துள்ள நிலையில், தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

Recommended Video

Maniratnam's son isolated | suhashini | Nandhan

இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி கண்ணாடி வழியாக, தனது மகன் நந்தன் தனிமைப்பட்டு கிடக்கும் காரணத்தை வீடியோ எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளார்.

லண்டனில் இருந்து

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் இருந்து கடந்த மார்ச் 18ம் தேதி சென்னை வந்துள்ளார். தனது வீட்டுக்குள்ளே தனி அறை ஒன்றில், கடந்த 5 நாட்களாக தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு இருக்கிறார் நந்தன்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இப்படி தன்னைத் தானே தனிமைப்பட்டு கிடக்கும் மணிரத்னத்தின் மகன் நந்தனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழும் என்பதால், அந்த வீடியோவிலேயே அதற்கான விளக்கத்தையும் நந்தன் கொடுத்துள்ளார். தனக்கு கொரோனா தாக்கம் இல்லை என்றும், வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதால், 14 நாட்கள் தனிமைப்பட்டு கிடக்க முடிவு செய்துள்ளேன் என்றுள்ளார்.

போர் அடிக்கத்தான் செய்யும்

போர் அடிக்கத்தான் செய்யும்

மேலும், கண்ணாடிக்கு அந்த பக்கம் இருந்த படி நந்தன் பேசும்போது, 14 நாட்கள் இப்படி தனிமைப்பட்டு கிடந்தால், போர் அடிக்கத்தான் செய்யும், ஆனால், அது பழகிவிடும், கொரோனா பாதிப்பு பரவாமல் தடுக்க வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் ஒவ்வொரு குடிமகனும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயமல்ல பொறுப்பு

பயமல்ல பொறுப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு நந்தனுக்கு ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சத்தினால் தான் அவர், இவ்வாறு செய்கிறார் என்ற பேச்சுக்கள் சில எழுந்து வருகின்றன. ஆனால், இது பயத்தின் காரணமாக அல்ல சுய கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு காரணமாக தனது தாய், தந்தையர் என்று குடும்பத்தினருடன் கூட நெருங்காமல் நந்தன் தனிமைப்பட்டு கிடக்கிறார்.

குஷ்பு பாராட்டு

சுஹாசினியின் மகன் நந்தனின் இந்த செய்கையை பார்த்த நடிகை குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், நந்தனின் செயலை பாராட்டி உள்ளார். இதற்குப் பெயர் தான் பொறுப்புணர்வு, பாராட்டுக்கள் ஹாசினி மற்றும் நந்தன் மணிரத்னம், சீக்கிரமே இயல்பு நிலைக்கு திரும்ப வாழ்த்துக்கள் என குஷ்பு பாராட்டியுள்ளார்.

கனிகா கபூர் அலட்சியம்

கனிகா கபூர் அலட்சியம்

கொரோனா வைரஸ் தாக்காமலே லண்டனில் இருந்து திரும்பிய நந்தன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், பாலிவுட் பாடகி கனிகா கபூர், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தும், பலவித பார்ட்டிகளுக்கு சென்று, பல பேருக்கு கொரோனா பீதியை கிளப்பியுள்ளதை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X