பணியாளர்களுக்கு பரவிய கொரோனா.. அமீர்கான் மற்றும் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டு வேலை ஆட்களுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து, அமீர்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

Amir Khan வீட்டில் கொரோனா Positive | Breaking News

உலகளவில் ஒரு கோடி பேருக்கும் மேலாக பதம் பார்த்துள்ள இந்த கொடிய வைரஸ், ஏழை பணக்காரர்கள், பிரபலங்கள், சாமானியர்கள் என எந்த பாரபட்சமும் பார்க்காமல் அனைவரையும் பாதித்து வருகிறது.

தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா பரவிய நிலையில், தற்போது அமீர்கான் வீட்டில் பணிபுரியும் நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

முதன்முதலாக

முதன்முதலாக

ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சனுக்கு கொரோனா வைரஸ் பரவியதே உலகளவில் சினிமா பிரபலங்கள் மத்தியில் இந்த கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை உண்டு பண்ணியது. தொடர்ந்து இட்ரிஸ் எல்பா உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்களையும் கொரோனா தாக்கியது.

கோதுமை பைகளில் பணம்

கோதுமை பைகளில் பணம்

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வந்த நிலையில், பல இந்திய நடிகர்கள் கோடிக்கணக்கில் நிவாரண உதவிகளை செய்ய முன் வந்தனர். நடிகர் அமீர்கான், கோதுமை பைகளில் பணம் வைத்து கொடுத்ததாக செய்தி ஒன்று வைரலானது. ஆனால், அதை தான் செய்யவில்லை ராபின் ஹுட் யாராவது செய்திருப்பார்கள் என ட்வீட் போட்டிருந்தார். இன்று வரை அந்த கோதுமை பைகளில் பணம் வைத்துக் கொடுத்த ராபின் ஹுட் யார் என்றே தெரியவில்லை.

பணி ஆட்களுக்கு

பணி ஆட்களுக்கு

இந்நிலையில், தற்போது நடிகர் அமீர்கான் வீட்டில் பணிபுரியும் பணி ஆட்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அமீர்கான் தெரிவித்துள்ளார். மேலும், மும்பை சுகாதாரத்துறை அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து வருவதற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அமீர்கானுக்கும் பரிசோதனை

அமீர்கானுக்கும் பரிசோதனை

வீட்டில் வேலை செய்யும் நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என வந்த நிலையில், அமீர்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறையினர் செய்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக, தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என அமீர்கான் தெரிவித்துள்ளார்.

அம்மாவுக்கு

அம்மாவுக்கு

மேலும், தனது அம்மாவுக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என வர பிரார்த்தனை செய்யுங்கள் என நடிகர் அமீர்கான் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மும்பையில், கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகி உள்ள நிலையில், பிரபலங்கள் வெளியே வராமல் தங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X