கொரோனா அச்சுறுத்தல்.. துபாயில் பிரமாண்டமாக நடக்க இருந்த திருமணம்..திட்டத்தை ரத்து செய்த இளம் ஹீரோ!

By

ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் நடக்க இருந்த தனது திருமணத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார், பிரபல ஹீரோ.

Recommended Video

கொரோனாவை முன்பே கணித்த தமிழ் படம் | TALKING 2 MUCH EP-2 | FILMIBEAT TAMIL

பிரபல தெலுங்கு ஹீரோ நிதின். தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான சுதாகர் ரெட்டியின் மகன். இவர், ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில்தான் கோபிசந்த் வில்லனாக அறிமுகமானார். இந்தப் படம் ஹிட்டானது. இது தமிழில் ரவி நடிப்பில் ஜெயம் என்ற பெயரிலேயே ரீமேக் ஆனது. தமிழிலும் சூப்பர் ஹிட்டானது.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

இதையடுத்து தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள நிதின், ராம்கோபால் வர்மா இயக்கிய அக்யுத் படம் மூலம் இந்திக்கும் சென்றார். இப்போது வெங்கு குடுமுலா இயக்கிய பீஷ்மா என்ற காமெடி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். அடுத்து ரங்க் தே உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

காதலுக்கு சம்மதம்

காதலுக்கு சம்மதம்

சில படங்களை தயாரித்தும் உள்ள நிதின், ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஷாலினி என்பவரை சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இதையடுத்து இவர்கள் காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த மாதம், ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

துபாயில் திருமணம்

துபாயில் திருமணம்

இவர்கள் திருமணத்தை ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் இந்தத் திட்டத்தை முறித்துவிட்டது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இதனால் உலகம் முழுவதும் பீதி அதிகரித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தி உள்ளன. இதனால், பிரபலங்கள், பொதுமக்கள் வீட்டில் அடைந்து கிடக்கின்றனர்.

திட்டம் ரத்து

திட்டம் ரத்து

இந்நிலையில் நடிகர் நிதின் தனது திருமணத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஐதராபாத்தில் உள்ள வீட்டில் அந்த தேதியில் எளிமையாகத் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இருவரது குடும்பத்தினர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X