யாரும் வெளிய வராதீங்க.. கண் கலங்கிய வடிவேலு.. கொரோனாவிற்கு உருக்கமான விழிப்புணர்வு!
சென்னை: கொரோனா பாதிப்பில் பல மக்கள் பாதிக்கபட்டு வருவதையும் அவதிபட்டு வருவதையும் கண்டு நகைச்சுவை நடிகர் வடிவேலு மிகவும் வருந்தி ஒரு வீடியோ பதிவை பகிர்ந்து உள்ளார் .
இந்த வீடியோவில் வடிவேலு மக்களை கெஞ்சி கேட்டுக்கொண்டார். தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கண் கலங்கி கேட்டு கொண்டுள்ளார். இதில் உலகம் சந்திக்காத பேரழிவை சந்தித்து வருகிறது மருத்துவர்கள் தங்களின் உயிரை பனையம் வைத்து போராடி வருகிறார்கள் .

இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் வெளியே வராதீர்கள். இதனால் யாருக்காக இல்லையோ நமது சங்கதிக்காக இதை செய்யுங்கள். வெளியே வராதீர்கள் என்று கண்கலங்கிய படி இருகரம் கூப்பி வேண்டுகொள் விடுத்துள்ளார் .
இறுதியாக யாரும் வெளிய போகதீங்க அசால்ட்டா இருக்காதீங்க என்று மெல்லிய குறலில் வடிவேலு கேட்டிருப்பது பார்பவர்களின் கண்ணில் கண்ணீரை வர வழைத்து இருக்கிறது. அனைவரையும் எளிதாக சிரிக்க வைத்த வடிவேலு தற்போது கண்கலங்கி நிற்பது பலரை ஆடிபோக வைத்து உள்ளது .
வடிவேலு தற்போது சினிமாவில் அதிகபடியாக நடிப்பதில்லை இருந்தும் ரசிகர்களின் மீம்களின் மூலம் இணையத்தின் ராஜாவாக வாழ்ந்து வருகிறார் .
தற்போது வடிவேலு கண்கலங்கி வீட்டை விட்டு வெளியாறாமல் இருங்கள் என்று கேட்கும் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இளைஞர்களின் இதய துடிப்பு வடிவேலு என்றால் அது மிகையாகாது . இப்போது வடிவேலு பேசியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் இளைஞர்களை சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications