நீங்களாம் அட்வைஸ் பண்ணலாமா.. மாஸ்டர் நடிகரை டென்ஷன் ஆக்கிய நெட்டிசன்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா நடிகர்கள், நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், நெட்டிசன் ஒருவர் சாந்தனுவை கலாய்த்து கமெண்ட் செய்யவே சாந்தனு கடுப்பாகி உள்ளார்.
பொது மக்களுக்கு
கொரோனா வைரஸ் பரவாமல் எப்படி பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை, நடிகர்கள் பலரும், தங்களால் முடிந்த வரை பலருக்கும் கொண்டு போய் சேர்க்க சொல்லி பிரதமர் முதல் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

நீங்க தான் அறிவாளியா?
சாந்தனுவின் வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வந்த நிலையில், அந்த வீடியோவை பார்த்த ஒரு நெட்டிசன், நடிகர்கள் என்றால் அறிவாளிகள், நாங்கள் எல்லாம் முட்டாள்களா? நான் உனக்கு அட்வைஸ் சொல்றேன், கொரோனா பரவாம எப்படி தடுக்கணும்னு என கமெண்ட் போட்டு நடிகர் சாந்தனுவை கடுப்பேற்றி உள்ளார்.
பப்ளிசிட்டி இல்லை
அந்த நெட்டிசனின் கமெண்ட்டால், கடுப்பான சாந்தனு, "எதை பப்ளிசிட்டிக்கு சொல்றோம்.. எதை நல்லதுக்கு சொல்றோம், அந்த வித்தியாசம் கூட தெரியாத சில ஜென்மங்கள் இருக்கு.. ரோடுல போய் பாரு, உன்ன மாதிரி யோசிக்கிறவங்கனால தான் ரோட்ல இன்னும் பல பேர் கேர்லஸா ரோடுல சுத்துறாங்க" என கடுப்பாகி உள்ளார்.

ட்வீட் டெலிட்
நடிகர் சாந்தனுவின் கோபமான ரிப்ளையை பார்த்த உடனே அந்த நெட்டிசன் தனது ட்வீட்டை டெலிட் செய்து விட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார். தளபதி விஜய் ரசிகர்கள், நெகட்டிவிட்டியை இக்னோர் பண்ணுங்க ப்ரோ, அவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம், நீங்க உங்க கடமையத்தான் செஞ்சிருக்கீங்க என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











