மூச்சுத் திணறல்.. மருத்துவமனையில் அனுமதி.. பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கானுக்கு கொரோனாவா?

மும்பை: பழம்பெரும் நடன இயக்குநர் சரோஜ் கான், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

2000 பாடல்களுக்கு மேல் பாலிவுட்டில் நடன இயக்குநராக பணியாற்றியவர் சரோஜ் கான்.

நடனத்தின் தாய் என்றும் மாஸ்டர் ஜி எனவும் பாலிவுட்டின் பிரபல நடிகர்களால் போற்றப்படுவர் சரோஜ் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

"Please come forward and help. Your donation will transform lives"

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல்

கடந்த சனிக்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக நடன இயக்குநர் சரோஜ் கானால் சரியாக சுவாசிக்க முடியவில்லை. உடனடியாக மும்பை பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சரோஜ் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி பாலிவுட்டை மீண்டும் பரபரப்பில் ஆழ்த்தியது.

கொரோனா இல்லை

கொரோனா இல்லை

71வயதாகும் சரோஜ் கானுக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர் என அவரது மகனும் நடன இயக்குநருமான ராஜு கான் இயக்குநர் குணால் கோலிக்கு தெரிவித்துள்ளார். அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் குணால் கோலி.

40 ஆண்டுகள்

40 ஆண்டுகள்

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் தனது நடன திறமையால் கலக்கி வரும் சரோஜ் கான், கடந்த ஆண்டு வெளியான கலங்க் மற்றும் கங்கனா ரனாவத்தின் மணிகர்ணிகா படம் வரை பல பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார். ரஜினியின் தாய் வீடு, சிருங்காரம் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும் இவர் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

வலம் வரும் வதந்தி

வலம் வரும் வதந்தி

பாலிவுட்டில் தொடர்ந்து, நடைபெற்று வரும் பிரபலங்களின் இழப்பு காரணமாக, நடன இயக்குநர் சரோஜ் கான் குறித்த வதந்திகளும் அங்கு மின்னல் வேகத்தில் பரவி வருகின்றன. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அம்மா நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் ராஜு கான் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X