twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா... இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை... ரிலீஸ் தள்ளிவைப்பு!

    By
    |

    சென்னை: வரும் 31 ஆம் தேதி வரை ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால், 36 படங்களின் படப்பிடிப்புகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

    இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தியேட்டர்கள்

    தியேட்டர்கள்

    அதன் ஒரு கட்டமாக மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை வரும் 31 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 990 தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 36 படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. 60 டிவி சிரீயல்களின் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளன.

    அருண் விஜய்

    அருண் விஜய்

    அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், டெல்லியில் நடந்து வந்தது. மொத்தம் 11 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டப்பட்டிருந்தது. 9 நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பே, படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு சென்னைத் திரும்பி விட்டது.

    வலிமை

    வலிமை

    அஜித்தின் 'வலிமை' பட ஷூட்டிங் செவ்வாய்க்கிழமை மாலை வரை சென்னையில் நடந்தது. நேற்று முதல் நிறுத்தப்பட்டு விட்டது. பிரபுதேவாவின் பஹீரா, பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் ஹே சினாமிகா படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வந்தது. நேற்று மாலை வரை இதன் ஷூட்டிங் நடந்தது.

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி

    சந்தானம், அனைகா நடிப்பில் ஜான்சன் கே இயக்கும் படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வந்தது. இதன் படப்பிடிப்பு நிறத்தப்பட்டு விட்டது.

    போர்ச்சுக்கல்

    போர்ச்சுக்கல்

    நவீன் இயக்கும் அக்னிச்சிறகுகள் படத்தின் ஷூட்டிங், ரஷ்யா, கஜகஸ்தானில் நடந்து வந்தது. இந்த மாதம் கோவா மற்றும் கொல்கத்தா பகுதிகளில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அது தள்ளிப் போயுள்ளது. இதே போல அகமது இயக்கத்தில், ஜெயம்ரவி, டாப்ஸி நடிக்கும் ஜனகனமன படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் போர்ச்சுக்கல்லில் தொடங்குவதாக இருந்தது.

    சீரியல்கள்

    சீரியல்கள்

    இப்போது திட்டத்தை மாற்ற வேண்டி இருக்கிறது என படக்குழுத் தெரிவித்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வந்தது. 35 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டம். இப்போது படக்குழு திரும்பிவிட்டது. இவை உட்பட 36 படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளன.

    படங்களின் ரிலீஸ்

    படங்களின் ரிலீஸ்

    பல படங்களின் ரிலீஸ் திட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மோகன்லால் நடித்துள்ள, மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், இந்த மாதம் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியில் வெளியாவதாக இருந்தது. ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் படம் அடுத்த மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.

    பிரச்னையை சந்திக்கும்

    பிரச்னையை சந்திக்கும்

    அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள சைலன்ஸ் படத்தையும் அடுத்த மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருதனர். இப்போது இந்தப் படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல யோகிபாபு நடித்துள்ள காக்டெயில், காவல்துறை உங்கள் நண்பன் உட்பட பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே வரும் வெள்ளிக்கிழமையும் அதற்கடுத்த வெள்ளிக்கிழமையும் ரிலீஸ் திட்டத்தில் இருந்த படங்கள், அடுத்த மாதத்துக்குச் சென்றால், மொத்த ரிலீஸ் பிளானும் பிரச்னைகளை சந்திக்கும் என்கிறார்கள், சில தயாரிப்பாளர்கள்.

    வரிசைப்படி

    வரிசைப்படி

    மெகா பட்ஜெட் படங்களான விஜய்யின் மாஸ்டர், ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று படமும் அதே மாதத்தில் ரிலீஸ் ஆக இருப்பதால், சின்ன படங்களுக்கு அப்போது தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், படங்களை வரிசைப்படி ரிலீஸ் செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    The Coronascare has upset all of Kollywood’s plans, Shoots disrupted, releases pushed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X