twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்போ பாரசைட்.. இப்போ கொரோனா.. என்ன கிரியேட்டிவிட்டி.. கே.எஸ். ரவிக்குமாரை சுற்றும் செம மீம்!

    |

    சென்னை: 90களில் சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்த இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், கொரோனா வைரஸ் தொடர்பாகவும் மீம் மெட்டீரியல் ஆகியுள்ளார்.

    நாட்டாமை, படையப்பா, தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்கும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் பயங்கர சம்மந்தம் இருப்பதாக மீம் கிரியேட்டர்கள், கே.எஸ். ரவிக்குமாரின் தொலை நோக்கு பார்வையை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

    இந்த ஆண்டு 4 ஆஸ்கர் விருதுகளை பெற்ற பாரசைட் திரைப்படமே கே.எஸ். ரவிக்குமார் படத்தின் காப்பி தான் என்றும் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    மின்சார கண்ணா

    மின்சார கண்ணா

    கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா, குஷ்பு, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படத்தின் கதையும் இந்த ஆண்டு 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற கொரிய திரைப்படமான பாரசைட் படத்தின் கதையும் ஒன்று தான். மேக்கிங்கில் வேறுபட்டு இருந்தாலும், மூலக் கதையில் இரு படங்களுக்கு இடையே 80% ஒற்றுமை இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    ரணகளத்திலும் குதூகலம்

    ரணகளத்திலும் குதூகலம்

    உலகளவில் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8000க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர். இந்தியாவில், 147 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும், கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இப்படி இருக்க, மீம் கிரியேட்டர்கள் கொரோனா வைரஸை வைத்து மீம் போட்டு விளையாடி வருகின்றனர்.

    வைரலாகும் மீம்

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்கி வைத்து தனிமைப்படுத்தி வருகின்றனர். நாட்டாமை படத்தில், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் கதையை கே.எஸ். ரவிக்குமார் இயக்கி இருந்தார். அதே போல, படையப்பா படத்தில், நீலம்பரி கதாபாத்திரம் 18 வருஷம், ஒரே அறையில் சிறைபட்டு குவாரன்டின் செய்யப்பட்டிருந்ததை வைத்து மீம் போட்டு தெறிக்க விட்டுள்ளனர்.

    தசாவதாரம்

    தசாவதாரம்

    கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தின் கதையே, மிக கொடிய வைரஸிடம் இருந்து உலகத்தை காப்பாற்றுவது தான். கொரோனா வைரஸும் உலகளவில் தற்போது, மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கி வரும் நிலையில், கே.எஸ். ரவிக்குமார் ஒரு தீர்க்கத்தரிசி என மீம் க்ரீயேட்டர்கள் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    KS Ravikumar was the one who originally introduced the quarantine method. Fans have also been sharing memes praising the director on Twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X