Just In
- 1 hr ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 1 hr ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 1 hr ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 1 hr ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
திமிர்' பிடித்த மோடிக்கு தொழிலாளர்கள், ஏழைகளின் வலிமையை புரிய வைப்போம்: திருப்பூரில் ராகுல் ஆவேசம்
- Automobiles
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- Finance
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாஸ்க் போடலையோ மாஸ்க்.. முகமூடி மாயாவிகளாக மாறிய இந்திய நடிகர்கள்.. கொரோனான்னா சும்மாவா!
சென்னை: சும்மா ஒரே ஒரு வைரஸ் உலகத்தையே கதிகலங்க வைத்து வருகிறது. நம்ம நாட்டுக்கெல்லாம் அந்த வைரஸ் பரவாது என ஜாலியா சுத்திகிட்டு இருந்த பிரபலங்கள் எல்லாம், இப்போ, மாஸ்க் போட்ட முகங்களாகவே சுற்றி வருகின்றனர்.
ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட விஷயம், உலகளவில் பல பிரபலங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் நடைபெறவிருந்த பல இந்திய படங்களின் ஷூட்டிங் கேன்சல் ஆகியுள்ள நிலையில், பிரபல ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் மாஸ்க் அணிந்து வலம் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

பாகுபலி ஆகிய நான்
பாகுபலியா இருந்தா மட்டும் கொரோனா வைரஸ் சும்மா விட்ருமா என்ன? ஆனாலும், நம்ம பிரபாசுக்கு தைரியம் ஜாஸ்தி தான். கொரோனா வைரஸ் பீதியால், பல பெரிய படங்களின் வெளிநாட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனது படத்திற்கான ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்துள்ளார். மாஸ்க் அணிந்த முகத்துடன் நம்ம சாஹோ ஏர்போர்ட் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரஸை ஏமாத்த முடியாதே
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில், துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன் என பலரையும் தனது காதல் வலையில் விழவைத்து ஏமாற்றிய ரிது வர்மா, கொரோனா வைரஸ் அச்சத்தால், மாஸ்க் அணிந்து சுற்றும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

ரிஸ்க் வேணாம்பா
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும் நடிகையுமான பரிணீதி சோப்ராவும், கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகத்தில் மாஸ்க் அணிந்து வலம் வருகிறார். மேலும், பாலிவுட் ரசிகர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

புட்ட பொம்மா
அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான அலா வைகுந்த புரமுலோ படத்தில் தனது தொடையழகை காட்டி ரசிகர்களை மயக்கிய புட்ட பொம்மா பூஜா ஹெக்டே, ஜார்ஜியாவில் நடைபெறும் பிரபாஸ் படத்தின் ஷூட்டிங்கிற்காக மாஸ்க் அணிந்து விமான நிலையத்தில் காத்திருந்த போது, கிளிக்கிய புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் கொரோனாவை விட வைரலாக பரவி வருகிறது.

நானும் மாஸ்க் மாட்டியிருக்கேன்
RX 100, RDX லவ், வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை பயல் ராஜ்புது, நானும் மாஸ்க் மாட்டியிருக்கேன் என செம ஹேப்பியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் லைக் செய்யப்பட்டு வருகிறது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என இந்தியா சினிமா நடிகர்கள் மொத்தமும் இப்போது மாஸ்க் முகங்களாகவே திரிகின்றனர்.