கொரோனா வைரஸ் பாதிப்பு.. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை!

By

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Recommended Video

Nayanthara-க்கு கொரோனாவா? வதந்தி குறித்து விக்னேஷ் சிவன் தரப்பு விளக்கம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இது அரசியல், சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நடிகர் விஷாலும் அவர் தந்தையும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதற்கிடையே பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாதிக்கப்பட்டார். தொற்று உறுதியானவுடன், தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

தொற்று உறுதி

தொற்று உறுதி

அதில், தனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாவும் கூறியிருந்தார். எனினும், தனது உடல்நிலை சீராக உள்ளது என பதிவிட்டார். இதனால், அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி வந்தனர். கடந்த கடந்த 6 ஆம் தேதி எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

சீராக உள்ளது

சீராக உள்ளது

அதில், அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்கு சீரான ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், மருத்துவமனை இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், லேசான அறிகுறிகளுடன் எங்களது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X