twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த மனசு தாங்க கடவுள்.. ஆடம்பர திருமணம் தேவையில்லை.. மொத்த செலவையும் கொரோனா நிதியாக அளித்த நடிகை!

    |

    மும்பை: ஊரடங்கு உத்தரவு காரணமாக திட்டமிட்ட திருமண விழா நடைபெறாத நிலையில், திருமண செலவு மொத்தத்தையும் கொரோனா நிதியாக வழங்கி உள்ளார் நடிகை பூஜா பானர்ஜி.

    கொரோனா கலவரத்தில் ஊரடங்கை மதிக்காமல் பிரம்மாண்டமாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியின் திருமணம் நேற்று நடைபெற்றது.

    பலரது விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், பிரபல இந்தி டிவி நடிகை பூஜா பானர்ஜி செய்த இந்த விஷயம் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

     சேரன் பட பாட்டுக்கு கண்கள் கலங்க டிக்டாக் வீடியோ போட்ட சீரியல் நடிகர்! சேரன் பட பாட்டுக்கு கண்கள் கலங்க டிக்டாக் வீடியோ போட்ட சீரியல் நடிகர்!

    View this post on Instagram

    Jai Mata di

    A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

    திருமண விழா

    சில மாதங்களுக்கு முன்னதாக நட்சத்திர ஹோட்டலில் இந்தி டிவி நடிகை பூஜா பானர்ஜிக்கும் சின்னத்திரை நடிகர் குணால் வர்மாவுக்கும் ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், லாக் டவுன் காரணமாக திருமண விழாவை ரத்து செய்துவிட்டனர்.

    கடந்த மாதமே

    காதலித்து வந்த பூஜா பானர்ஜி மற்றும் சின்னத்திரை நடிகர் குணால் வர்மா ஜோடி கடந்த மாதமே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொண்டனர். குடும்பங்கள், நண்பர்கள், பிரபலங்கள் சூழ திருமண விழாவை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது, பத்திரப் பதிவு திருமணத்தையே திருமணமாக கருதி தங்களின் பெற்றோர்களின் ஆசியுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கி விட்டனர்.

    கொரோனா நிதி

    கடந்த ஏப்ரல் 15ம் தேதி நடைபெற விருந்த இவர்களது திருமண நிகழ்ச்சி ரத்தான நிலையில், அதற்காக செலவு செய்ய திட்டமிட்டு இருந்த மொத்த தொகையையும் கொரோனா வைரஸ் காரணமாக உணவின்றி பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவும் வண்ணம் உதவி செய்துள்ளனர். அவர்களின் பரந்த மனசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

    Recommended Video

    அடுத்த 20 நாட்கள் ரொம்ப முக்கியம்.. கொரோனாவில் இருந்து தப்பிக்க.. விவேக் சொல்லும் ஆசமான ஐடியா!
    கல்யாண விருந்து

    கல்யாண விருந்து

    கொரோனா வைரஸ் பிரச்சனை முற்றிலுமாக முடிந்த பிறகு, நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து விருந்து நடத்தவும் காத்திருக்கிறோம். லாக் டவுன் காரணமாக நேரில் வாழ்த்த இயலாத பலரும் போன் செய்து வாழ்த்தி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்களது நன்றியையும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Pooja Banerjee additionally stated that she is going to donate all the cash for the celebration of her marriage. Against the conflict in opposition to the Corona virus, this cash can be distributed amongst those that are in want.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X