twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன் வேர்ல்ட் நிகழ்ச்சி.. ஷாருக்கானுக்கு நன்றி சொன்ன உலக சுகாதார அமைப்பு.. என்ன விஷயம் தெரியுமா?

    |

    மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி கூறியுள்ளது.

    கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்ட ஹாலிவுட் பிரபலங்கள் உடன் இணைந்து பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் ஒன் வேர்ல்ட் எனும் ஆன்லைன் லைவ் நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே நேற்று வழங்கினர்.

    'நீங்க அதை மிஸ் பண்றீங்க..நாங்க இதை மிஸ் பண்றோம்..' ஒவராக ஒல்லியான ஹீரோயினுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்!'நீங்க அதை மிஸ் பண்றீங்க..நாங்க இதை மிஸ் பண்றோம்..' ஒவராக ஒல்லியான ஹீரோயினுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்!

    Coronavirus: WHO thanks Shah Rukh Khan for solidarity in fight against COVID-19

    WHO எனும் உலக சுகாதார அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தனது அதீத பங்கை ஆற்றிய பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரிசியஸ் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

    சுமார் 8 மணி நேரம் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நடைபெற்ற இந்த லைவ் நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சியாக சுமார் 2 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த லைவ் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இந்த லைவ் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வசூலை கொரோனா வைரஸுக்கு எதிராக மக்களை காக்கும் முனைப்பில் தங்கள் உயிரையும் தியாகம் செய்து போராடி வரும் சுகாதார பணியாளர்களின் நலனுக்காக வழங்க முடிவு செய்துள்ளனர்.

    குளோபல் சிட்டிசன் நிறுவனம் WHO உடன் இணைந்து இந்த லைவ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கொரோனா கலவரத்தால் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் ஊரடங்கு நிலவரங்களையும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு அளித்து வரும் சிகிச்சைகளையும் மாண்டேஜ் வீடியோக்களாக ஒளிபரப்பி அந்த லைவ் கன்செர்ட்டை தொடங்கினர்.

    நிகழ்ச்சியின் இறுதியாக செலின் டியோன், ஆண்ட்ரியா போசெல்லி, ஜான் லெஜெண்ட் மற்றும் லேடி காகா உள்ளிட்ட பிரபலங்கள் உலக மக்களுக்காக பிரார்த்தனை செய்தபடி இந்த இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

    English summary
    The World Health Organisation (WHO)'s Director-General thanked Shah Rukh Khan for standing in solidarity with the organisation and supporting the Global Citizen and One World: Together At Home programme.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X