Just In
- 6 min ago
பேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ!
- 19 min ago
சினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி!
- 1 hr ago
பண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!
- 2 hrs ago
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
Don't Miss!
- News
லட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்த அனுமன்...இப்போது வைரல் ஆவது ஏன் தெரியுமா
- Automobiles
அறிமுகமாகி 15ஆண்டுகளாகியும் மவுசு குறையாமல் விற்பனையாகும் மாருதி கார்... இதுவே 2020ல் சிறந்த விற்பனையான கார்!!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிரட்டும் கொரோனா... அண்ணாத்த, பொன்னியின் செல்வன், கோப்ரா...கேன்சலாகும் ஷூட்டிங், ரிலீஸ் பாதிப்பு
சென்னை: கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, சினிமா படப்பிடிப்புகள், ரிலீஸ்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவியது.
தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈரானிலும் அதிக அளவில் பரவி வருகிறது.

தேசிய பேரிடர்
சீனாவில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாடு தெரிவித்து இருந்தாலும் இந்த வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தைப் பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

சினிமா படப்பிடிப்புகள்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவின் சினிமா படப்பிடிப்புகள். ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடக்க இருந்தது. இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங், ரஷ்யாவின் நடந்து வந்தது. கொரோனா காரணமாக பாதியிலேயே இந்தியா திரும்புவதாக, இயக்குநர் அஜய் ஞானமுத்து, தெரிவித்திருந்தார்.

ரிலீஸ் அப்டேட்
'கோப்ராவை தாக்கிய கொரோனா? இந்திய அரசின் பயணத் தடை விதிகளின் காரணமாக, ரஷ்யாவில் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. போங்கயா நீங்களும் உங்க கொரொனாவும்' என்று அவர் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் தான் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை தாமதப்படுத்துவதாகக் கூறி ட்வீட் செய்துள்ளார், கார்த்தியின் சுல்தான் படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

மரைக்காயர்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு புனேவில் தொடங்க இருந்தது. அது கேன்சல் செய்யப்பட்டுள்ளது. பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் படம் ஏப்ரல் 2 ஆம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இப்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மோகன்லால், சுனில் ஷெட்டி, அர்ஜூன் நடித்துள்ள 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' படம், இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.

ஷூட்டிங் நிறுத்தம்
இந்நிலையில் அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி, மஞ்சு வாரியர் நடிக்கும் த பீரீஸ்ட் படத்தின் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தின் ஷூட்டிங் உட்பட பல்வேறு படங்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியில் அக்ஷய்குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதே போல மேலும் சில படங்களின் ரிலீஸ், படப்பிடிப்புகள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன.

ஜார்ஜியா
இருந்தாலும் ஒரு சில படங்களின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. சல்மான் கான் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கும் ராதே படத்தின் ஷூட்டிங் மும்பையில் வருகிறது. அதே போல பிரபாஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் செட் அமைத்து நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள சமீபத்தில் பூஜா ஹெக்டே சென்றுள்ளார்.